இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110

விழாகால சீசனை முன்னிட்டு ஹெச்எம்டி நிறுவனம், நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட் போன்களை வரும் 19ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களின் விலை 11 ஆயிரத்து 499 ரூபாயாகும்.

இந்த ஸ்மார்ட்போன்கள், 6 இன்ச் HD+ டிஸ்பிளே உடன், 18:9 அங்குல கொண்டதாக இருக்கும். மேலும் இதில் 13MP+5MP டுயல் ரியர் கேமரா மற்றும் 8 MP பிரான்ட் கேமராகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110

இந்த ஸ்மார்ட் போன் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய HMD குளோபல் துணை தலைவர் அஜய் மேத்தா, இது சிறந்த போன்-ஆக இருப்பதால், மார்க்கெட்டில் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தயாரிப்புகள் ஆப் லைன் வாடிக்கையாளர்களுக்கான ஒன்று என்றார்.

இந்த டிவைஸ், மீடியாடேக் ஹெலோ P22 ஆக்டோ-கோர் பிராசசர் மற்றும் 3500mAh பேட்டரியுடன் வெளியாக உள்ளது. இந்த பேட்டரிகளில் இரண்டு நாட்களுக்கு சார்ஜ் நீடித்து இருக்கும் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவுக்காகவே உருவாக்கப்பட்டு முதலில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த விழாகால சீசனில் இந்த் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் அவர் கூறினார்.

நோக்கியா 3.1 பிளஸ் உடன் ஏர்டெல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 199 ரூபாய் பிளானில் 1TB, 4G டேட்டா அளிக்கப்பட உள்ளது.இதுமட்டுமின்றி நோக்கியா 8110 ஸ்மார்ட்போன்களும், நோக்கிய 8110 ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் விற்பனை வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 5 ஆயிரத்து 999 ரூபாயாகும். இந்த டிவைசஸ்கள் வரும் 24ம் தேதி முலம் இந்தியாவில் விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட் போன்கள் கோல்கம் 205 மொபைல் பிளாட்பார்மில் இயங்கும்

இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110

நோக்கிய 8110 ஸ்மார்ட்போன்களில் VoLTE காலிங் வசதி உள்ளது. இது 4G போன்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற போனாக இருக்கும்.

மேற்குறிய இரண்டு டிவைஸ்களும் இந்தியாவில் உள்ள முன்னணி மொபைல் விற்பனையாளர்களிடம் கிடைக்கும், மேலும் இந்த போன்களை Nokia.com/phones என்ற இணையதளத்திலும் வாங்கி கொள்ளலாம்.