புதிய நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் சிறப்புகள்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் மாடலை ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் உடன் 4000mAh பேட்டரியுடன் டிரிப்ள் செட்டப் கேமரா கொண்டதாக வெளியிட்டுள்ளது.

இன்றைக்கு நோக்கியா நிறுவனம் நோக்கியா 2.4 உட்பட நோக்கியா பவர் இயர் பட்ஸ் மற்றும் போர்டெபிள் வயர்லெஸ் ஸ்பீக்கரையும் வெளியிட்டுள்ளது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்

நோக்கியா 3.4 போனில் 6.39 அங்குல எச்டி+ திரையுடன் 720 x 1560 பிக்சல் தீர்மானம், 2.5டி வளைந்த கிளாஸ் பாதகாப்பினை கொண்டு 3 ஜிபி ரேம் 32ஜிபி அல்லது 64ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் உடன் 64ஜிபி சேமிப்பை பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதள ஆதரவில் இயங்குகிறது.

கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, இரண்டாவதாக 5 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், அடுத்து 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், இரவு முறைக்கும் மற்றும் போர்ட்ரெயிட் ஆதரவினை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், இரட்டை 4G VoLTE, வை-ஃபை 802.11 b / g / n, புளூடூத் 4.2, GPS + GLONASS, மைக்ரோ யூ.எஸ்.பி போன்றவற்றுடன் 4000mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் நோக்கியா 3.4 விலை தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.13,675 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அக்டோபரில் கிடைக்க துவங்கலாம்.