சர்வதேச அளவில் 4ஜி சேவை மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் பிரசத்தி பெற்ற நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 3310 மொபைல் போனில் 4ஜி ஆதரவுடன் கூடிய ஆண்டராய்டு இயங்குதளத்தை பின்புலமாக கொண்டு செயல்படும் யுன் ஓஎஸ் கொண்டதாக நுட்ப விபரங்கள் கசிந்துள்ளது.

நோக்கியா 3310 4G

2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் முதன்முறையாக 2ஜி ஆதரவு பெற்ற நோக்கியா 3310 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மேலும் கடந்த செப்டம்பரில் 3ஜி ஆதரவு பெற்ற நோக்கியா 3310 மொபைல் போன் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருந்தது.

சிம்பியன் 30 ஓஎஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3310 மொபைல் போனை தொடர்ந்து 3ஜி ஆதரவு பெற்ற மொபைல் ஜாவா அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது சீனாவின் தரச்சான்றிதழ் வழங்கும் டீனா இணையதளத்தில் 4ஜி ஆதரவு கொண்டதாக நோக்கியா 3310 விபரங்கள் வெளியாகியுள்ளது.

சீனாவை மையமாக கொண்டு செயல்படும் அலிபாபா குழுமத்தின் ஆண்டராய்டு இயங்குதளத்தின் அடிப்படையிலான யுன் ஓஎஸ் அதாவது அலியுன் ஓஎஸ் கொண்டு இயக்கப்படும் வகையிலான டி9 கீபோர்டு கொண்டதாக நோக்கியா 3310 மொபைல் போன் அடுத்த சில வாரங்களில் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா உட்பட சர்வதேச அளவில் அடுத்த சில மாதங்களில் நோக்கியா 3310 4ஜி மொபைல் போன் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.