10,990 ரூபாயில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

இன்றைக்கு , இந்தியாவில் ரூ.10,990 விலையில் நோக்கியா 4.2 விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போனில் மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்புடன் இரட்டை கேமரா கொண்டு 3,000mAh பேட்டரி ஆப்ஷனை கொண்டதாக வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த போனில் வழங்கப்பட்டுள்ள 3,000mAh பேட்டரி ஆனது 100 மணி நேரம் எம்பி3 பாடல்களை கேட்கவும், 18 மணி நேரம் தொடர்ந்து பேசுவும் வழி வகை செய்யும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா 4.2 சிறப்புகள்

5.71 அங்குல திரையுடன் 1520×720 பிக்சல் 19:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்ட நோக்கியா 4.2 போனில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் கொண்டு இயக்கப்பட்டு 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி மெமரி கொண்டதாக விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 400 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

3000 Mah பேட்டரி கொண்ட நோக்கியா 4.2 போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF மற்றும் 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா உடன் வழங்கப்பட்டுள்ளது.

Nokia 4.2 specifications

 • 5.71 அங்குல (1520 x 720 pixels) 19:9 a-Si முழுவியூ 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு
 • ஆக்டோ கோர் (Quad 1.95GHz Cortex A53 + Quad 1.45GHz Cortex A53) ஸ்னாப்டிராகன் 439 உடன் Adreno 505 GPU
 • 3GB ரேம், 32GB மெமரி,
 • மைக்ரோ எஸ்டி கார்டு 400GB
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
 • இரு சிம் கார்டு
 • 13MP ரியர் கேமரா உடன் எல்இடி ஃபிளாஷ் LED flash, PDAF f/2.2 துவாரம் , 1.12µm pixel size, 2MP கேமரா
 • 8MP முன்பக்க கேமரா f/2.0 துவாரம், 1.12µm pixel size
 • அளவுகள்: 148.95 x 71.30 x 8.39mm; எடை: 161g
 • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடுத் 4.2, GPS, micro USB
 • 3000mAh பேட்டரி

நோக்கியா 4.2 விற்பனை சலுகை

நோக்கியா இணையதளத்தில் வாங்கும்போது “LAUNCHOFFER” என்ற ப்ரோமோ கோடினை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.500 வரை தள்ளுபடியை ஜூன் 10 வரை பெறலாம். மேலும் ரூ.2500 வரை கேஷ்பேக்கினை பெற வோடபோன் ஐடியா பயனாளர்களுக்கு ரூ.199 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 ரூபாய் என 50 வவுச்சர்கள் வழங்ப்பட உள்ளது.

அனைத்து முன்னணி ரீடெயில்களிடமும் நோக்கியா 4.2 மொபைல் போன் ரூ.10,990 விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.