இந்திய சந்தையில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் , நோக்கியா 5.1 பிளஸ் மொபைலில் புதிதாக 4ஜிபி ரேம் உடன் கூடிய 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் கூடிய 64ஜிபி மெமரி என இரு மாடல்களை வெளியிட்டுள்ளது.

வருகின்ற பிப்ரவரி 7ந் தேதி முதல் ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் பிப்ரவரி 12 முதல் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி மாடல் கடந்த வருடம் முதல் விற்பனைக்கு கிடைக்கின்றது.

நோக்கியா 5.1 பிளஸ் மொபைல் போன் 5.86 ஹெச்டி பிளஸ் திரையுடன் 720×1520 பிக்சல் தீர்மானத்தை கொண்டு 2.5டி வளைந்த பாதுகாப்பு கிளாஸ் பெற்றுள்ளது. 1.8GHz மீடியாடெக் ஹீலியோ P60 பிராசெஸருடன் கூடிய 3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் உடன் கூடிய 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் கூடிய 64ஜிபி மெமரி என மூன்று வேரியன்டில் கிடைக்கும். மைக்ரோ எஸ்டி அட்டை வாயிலாக 400 ஜிபி வரை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

கேமரா பிரிவில் பின்புறத்தில் டூயல் சென்சார் கேமரா வழங்கப்பட்டு 13 எம்பி + 5 எம்பி என இரு சென்சாருடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் வழங்கப்பட்டுள்ளது. 4ஜி வோல்டிஇ ஆதரவுடன் ப்ளூடூத், 3060mAh பேட்டரி கொண்டதாக கிடைக்கின்றது.

நோக்கியா 5.1 பிளஸ் விலை பட்டியல்

5.1 பிளஸ் 3 ஜிபி / 32 ஜிபி – ரூ. 10,599

5.1 பிளஸ் 4 ஜிபி / 64 ஜிபி – ரூ. 14,449

5.1 பிளஸ் 6 ஜிபி / 64 ஜிபி – ரூ. 16,449

அறிமுக சலுகையாக ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரூ.2000 கேஷ்பேக் சலுகை உடன் 12 மாதங்களுக்கு 240 ஜிபி கூடுதல் டேட்டா நன்மையை அளிக்கின்றது. ஏர்டெல் ரூ.199, ரூ.249 மற்றும் ரூ.448ங திட்டங்களில் மட்டும் கிடைக்கும்.