இன்று விற்பனைக்கு வந்தது நோக்கியா 5.1 பிளஸ்

HMD குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட் போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. பிளிக்கார்ட்டில் இன்று நண்கல் 12 மணிக்கு முதல் விற்பனை வந்துள்ளது . இந்த புதிய போன்களின் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது குறித்து கடந்த மாதமே அறிவிப்பு வெளியானது. ஆனாலும் இந்த ஸ்மார்ட் போன்களுக்கான விலை விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இன்று முதல் பிளிக்கர்ட்டில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், புதிய நோக்கியா 5.1 பிளஸ் போன்களின் விலை 15,000 ரூபாய் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்த நோக்கியா 5.1 பிளஸ் போன்கள், நோக்கியா 6.1 பிளஸ் உடன் இணைந்து கடந்த மாதம் வெளியிடப்பட்டது. நோக்கியா 5.1 பிளஸ் போன்களில் பிளாடிக் பிரேம்களுடன் மெட்டல் சான்ட்விட்ச் கிளாஸ் பேனல் மதுரம் நானோ கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

இன்று விற்பனைக்கு வந்தது நோக்கியா 5.1 பிளஸ்

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்பெசிபிகேஷன்களை பொருத்தவரை, முன்புற 5.8 இன்ச் டிஸ்பிளேகளுடன் 1520×720 ரெசலுசன் கொண்டதுடன் 19:9 விகித அளவும் கொண்டுள்ளது. இந்த போன்கள் மீடியாடெக் ஹெலோ P60 பிராசசர்களுடன் -G72 GpU-வை கொண்டுள்ளது. மேலும் இந்த டிவைஸ் கள் 2 வகைகளில் கிடைக்கும். அவை, 3GB மற்றும் 32GB ரோம் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB ரோம்களுடன் வெளியாகிறது.

இன்று விற்பனைக்கு வந்தது நோக்கியா 5.1 பிளஸ்

கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட் போனில், டூயல் காமிராகள் 13MP பிரைமரி கேமராவுடன் 5 MP செகண்டரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 8MP ஸ்நாப்பர்களுடன் f/2.2 அப்பச்சர் களுடன், வீடியோ காலிங், செல்பி வசதிகளையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த டிவைசில் பிங்கர் பிரிண்ட் சென்சார்களும், பின்புற கேமராவில் பொருத்தப்பட்டுள்ளது. 3060mAH பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த நோக்கியா 5.1 பிளஸ் போன்கள், ஆண்டிராய்டு ஓரியோ ஆபரேடிங் சிஸ்டம் மூலம் இயங்கும். இந்தாண்டில் இறுதியில் இந்த டிவைஸ்களுக்கு ஆண்டிராய்டு பை அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.