குவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது

ஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900 தோராயமாக அமைந்துள்ளது.

நோக்கியா 5.4, இந்நிறுவனத்தின் சமீபத்திய மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போன் ஆக விளங்குகின்றது. இதில் பிரைமரி ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் பின்புற கேமரா உட்பட 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஏங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது. பிரைமரி கேமராவில் 60fps வீடியோ பதிவு உடன் OZO மூலமாக ஆடியோ மற்றும் காற்று சத்தத்தை ரத்து செய்யும் தன்மையை பெற்றுள்ளது.

6.39 அங்குலத்துடன் 720 x 1520 பிக்சல் தீர்மானத்துடன் HD+ 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் அக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் பெற்று 4ஜிபி மற்றும் 6ஜிபி என இரு விதமான ரேம் ஆப்ஷனை பெற்று 64 ஜிபி மற்றும் 128 ஜிபி கொண்டதாக அமைந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பெற்ற இந்த மொபைலில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இரட்டை 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 b / g / n, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் 4.2, GPS + GLONASS, யூஎஸ்பி Type-C, NFC ஆகியவற்றுடன் 4000mAh பேட்டரியுடன் 10W விரைவு சார்ஜரை கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் நோக்கியா 2.4 சமீபத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நோக்கியா 3.4 அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ளது. 5.4 மாடல் சற்று தாமதமாக அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகலாம்.

ரூ.59,990 விலையில் நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 வெளியானது