ஹெச்எம்டி குளோபல் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்ற ரூ.13,499 நோக்கியா 5 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடங்கிய மெமரி பெற்ற புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 5 மொபைல்

விற்பனையில் உள்ள நோக்கியா 5 மொபைல் போனில் 2ஜிபி ரேம் கொண்டு 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புன் கிடைத்து வரும் நிலையில் தற்போது ரேம் 3ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5.2 அங்குல ஐபிஎஸ் திரையுடன் கூடிய கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பபு அம்சத்தை பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸருடன் 3ஜிபி ரேம் மற்றும் 2ஜிபி ரேம் பெற்றதாக கிடைக்க தொடங்கியுள்ளது.

கேமரா பிரிவில் 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டு ஆட்டோஃபோகஸ் , PDAF ஆகியவற்றுடன் முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை தொடங்கப்படுகின்ற நோக்கியா 5 போன் ஆஃப்லைன் ரீடெயிலர்களிடம் நவம்பர் 14ந் தேதி முதல் கிடைக்க உள்ளது.

நோக்கியா 5 நுட்ப விபரம்
 • 5.2 அங்குல எச்டி திரை
 • 1.4GHz ஸ்னாப்டிரகன் 430 ஆக்டோ -கோர் பிராசஸர்
 • 2GB ரேம் & 3GB ரேம்
 • 16GB & 32GB  சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB
 • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
 • 13MP பின்புற கேமரா
 • 8MP முன்புற கேமரா
 • 4G VoLTE
 • 3000mAh பேட்டரி (நீக்க இயலாத)
 • கைரேகை சென்சார், ஃபாஸ்ட் சார்ஜிங்
 • விலை ரூ.12,499/ ரூ.13,499