ரூ.3,399க்கு பிரபலமான நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் ம்யூசிக் அறிமுகம்

மீண்டும் கிளாசிக் ஸ்டைல் நோக்கியா மொபைல் போன்கள் வரிசையாக ஹெச்எம்டி குளோபல் வெளியிட்டு வரும் நிலையில் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் ம்யூசிக் ரூ.3,399 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்பி3 பிளேயர் மற்றும் பன்பலை வானோலி கேட்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய நோக்கியா 5310 மொபைலில் முன்புறத்தில் டூயல் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பழைய மொபைலில் இடம்பெற்றிருந்ததைப் போன்று பக்கவாட்டில் வால்யூம் அப் மற்றும் டவுன் பட்டன், டிராக் சேஞ்ச் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இரட்டை சிம் கார்டு ஆதரவுடன் வந்துள்ள புதிய 5310 மாடலில் 2.4 அங்குல (320 x 240 pixels) QVGA திரையுடன் நோக்கியாவின் சீரிஸ் 30+ இயங்குதளத்தில் செயல்படுகின்றது. 8 எம்பி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், கூடுதலாக சேமிப்பை அதிகரிக்க 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயான்படுத்தலாம்.

2ஜி ஆதரவு பெற்ற இந்த மொபைலில் பின்புறத்தில் VGA கேமரா எல்இடி ஃபிளாஷ் உடன் வழங்கப்பட்டு 1200mAh பேட்டரி அதிகபட்சமாக 7.5 மணி நேர டாக் டைம் திறனை கொண்டுள்ளது.