நாளை வெளியாகிறது  நோக்கியா 6.1 பிளஸ்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6.1 பிளஸ் நாளை வெளியாக உள்ளது. இந்த மொபைல்கள் பிரத்தியோகமாக பிளிப்கார்டில் விற்பனை செய்யப்பட உள்ளது. நோக்கியா X6 வகை மொபைல் போன்கள் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நோக்கியா 6.1 பிளஸ் குறித்த டீசர் ஒன்று பிளிப்கார்டில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் இசையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ, நாளை இந்த போன் விற்பனைக்கு வரும் என்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. நோக்கியா 6.1 பிளஸ் ஒரு மாதம் முன்பே ஹாங்காங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வேதச மார்க்கெட்டில் விற்பனை வந்து உள்ள இந்த மொபைல்களின் விலை 20,100 ரூபாயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 6.1 பிளஸ், ஆண்டிராய்டு ஒன் திட்டத்தின் ஒரு பகுதியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் உடன் இணைந்துள்ளதால், அப்டேட்கள் விரைவாக கிடைக்கும். இதுமட்டுமின்றி ஸ்போர்ட் டிஸ்பிளே நாட்ச், ஸ்லைட் சின் கீழ் பகுதியில் நோக்கியா பிராண்டிங், பின்புறத்தில் வெர்டிக்கள் டுயல் காமிரா செட்டப். ஆண்டிராய்டு ஒன் டிவைஸ் தவிர்த்து, நோக்கியா 6.1 பிளஸ் ஸ்பெசிபிகேஷன், நோக்கியா X6 போன்றே இருக்கும்.

நாளை வெளியாகிறது  நோக்கியா 6.1 பிளஸ்

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்பெசிபிகேஷன்

நோக்கியா 6.1 பிளஸ், டுயல் சிம் (நானோ), இது ஆண்டிராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் 5.8 இன்ச் ஹச்டி டிஸ்பிளே (1080×2280 பிக்சல்கள்) டிஸ்பிளே உடன் 2.5D கொரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளது. இதில் டிஸ்பிளே நாட்ச், 19:9 ரேசியோவை கொண்டுள்ளது. மேலும், இதில் ஆக்டோவா-கோர் ஸ்நாப்டிராகன் 636 Soc, இத்துடன் 4GB ரேம்-ஐ உள்ளடக்கியதாக இருக்கும் நோக்கியா 6.1 பிளஸ், 3060mAH பேட்டரி கொண்டதால் 18w சார்ஜார் மூலம் சார்ஜ் செய்தால் 30 நிமிடத்தில் 30 சதவிகிதம் சார்ஜ் ஆகி விடும் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 400GB வரை விரிவு செய்யும் வசதி கொண்ட ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.