நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்

வரும் ஜூன் 6ஆம் தேதி பஞ்ச் ஹோல் டிசைன் பெற்ற நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் விலை  மற்றும் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. சில சந்தைகளில் நோக்கியாவின் எக்ஸ்71 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

48 மெகாபிக்சல் கேமரா உடன் டிரிப்ள் கேமரா செட்டப் கொண்டதாக விற்பனைக்கு வெளியாக உள்ளது. முன்புறத்தில் டிஸ்பிளே அமைப்பில் பஞ்ச் ஹோல் டிசைன் கொண்ட 16 எம்பி கேமரா பெற்றிருக்கும்.

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் சிறப்புகள்

ரூபாய் 18,999 விலையில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் முக்கிய விபரங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. மிகவும் சவாலான விலையில் இந்த மொபைல் பல்வேறு சிறப்புகளை அறியலாம்.

6.39 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையுடன் 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்று  ஸ்னாப்டிராகன் 660 பிராசெஸருடன் கூடிய இந்த மொபைலில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பை பெற்றதாக விளங்குகின்றது. ZEISS ஆப்டிக்ஸ் ஆதரவை பெற்றதாக வரவுள்ள நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், கூடுதலாக 8 மெகாபிக்சல் 120 டிகிரி கோ அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றிருக்கும்.

Nokia 6.2

செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் ஆதரவுடன் கூடிய 16 மெகாபிக்சல் சென்சார் முன்புறத்தில் இடம்பெற்றிருக்கும். 3,500mAh பேட்டரி கொண்டுள்ளது.