நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 பிளஸ், & நோக்கியா 6 (2018) விலை விபரம்ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 பிளஸ், மற்றும் நோக்கியா 6 (2018) என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா மொபைல் போன்கள்

நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 பிளஸ், & நோக்கியா 6 (2018) விலை விபரம்

மீண்டும் மொபைல் போன் சந்தையில் மிக சிறப்பான பங்களிப்பினை பெறும் நோக்கில், நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி மிக விலைஉயர்ந்த மற்றும் குறைந்தபட்ச விலை கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வரிசையில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி இந்தியாவில் நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 பிளஸ், & நோக்கியா 6 (2018) ஆகிய மூன்று மொபைல்களை வெளியிட்டுள்ளது.

நோக்கியா 8 சிராக்கோ

முதன்முறையாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் வெளியிடப்பட்ட நோக்கியா 8 சிராக்கோ இந்நிறுவனத்தின் பிரிமியம் ரக மாடலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டையின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சிராக்கோ மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் கூடியதாக வந்துள்ள மொபைலில் 5.5 அங்குல QHD 3D p-OLED திரையுடன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பெற்று 6ஜிபி ரேம் உடன் 128ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்று விளங்குகின்றது.

சிறப்பான வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ பெறும் வகையில் பின்புறத்தில் Carl Zeiss optics உடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடுத் 5.0 , ஐபி68 தூசு மற்றும் நீர் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலான நுட்பத்தை கொண்டிருக்கின்றது.

நோக்கியா 8 சிராக்கோ மொபைல் விலை ரூ. 49,999 ஆகும். வருகின்ற ஏப்ரல் 20 முதல் முன்பதிவு தொடங்கப்படுகின்ற நிலையில் , ஏப்ரல் 30, 2018 முதல் ஆன்லைன் , நோக்கியா மொபைல் ஸ்டோர் மற்றும் முன்னணி ரீடெயில்களிடம் கிடைக்க உள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் சலுகை திட்டத்தின் கீழ் 120ஜிபி கூடுதல் டேட்டாவை இலவசமாக வழங்குகின்றது. அதாவது ரூ.199 அல்லது ரூ.379 கொண்டு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில்கூடுதலாக மாதந்தோறும் 20ஜிபி டேட்டா வழங்குகின்றது.

நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 பிளஸ், & நோக்கியா 6 (2018) விலை விபரம்

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 கருவியின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ. 25,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஏப்ரல் 20 முதல் முன்பதிவு தொடங்கப்பட்டு ஏப்ரல் 30 முதல் ஆன்லைன் , நோக்கியா மொபைல் ஸ்டோர் மற்றும் முன்னணி ரீடெயில்களிடம் கிடைக்க உள்ளது.

நோக்கியா 7 பிளஸ் மொபைல் போன் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்ற 6 அங்குல முழு HD+ (1080×2160 பிக்சல் தீர்மானத்துடன் ) IPS டிஸ்பிளே பெற்றதாக 18:9 திரை விகிதம் கொண்டு கிளாஸ் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் வழங்கப்பட்டு செராமிக் பாடியை பெற்ற இந்த மொபைல் போன் கருப்பு உடன் இணைந்த காப்பர் மற்றும் வெள்ளை உடன் இணைந்த காப்பர் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கப் பெற உள்ளது. ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 7 பிளஸ் கருவியில் 64GB உள்ளீட்டு சேமிப்பு திறனுடன் 4GB LPDDR4 ரேம் கொண்டு இயக்கப்படுகின்றது.

Zeiss optics கொண்டு செயற்க்கை நுண்ணறிவு பெற்ற ப்ரோ கேமரா மோடினை வழங்கியுள்ளது. இதில் 13 மெகாபிக்சல் செனாருடன் f/2.6 அப்ரேச்சர், 1 மைக்ரான் பிக்சல் 2X ஆப்டிகல் ஜூம் உடன் இணைந்த 12 மெகாபிக்சல் கேமரா என இரட்டை எல்இடி ஃபிளாஷை பெற்றுள்ளது.

நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 பிளஸ், & நோக்கியா 6 (2018) விலை விபரம்

 

நோக்கியா 6 (2018)

நோக்கியா 6 மொபைல் போன் மாடலின் மேம்படுத்தப்பட்ட நோக்கியா 6 (2018) மேம்படுத்தப்பட்ட மாடல்   5.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன்  2.5டி கொரில்லா கிளாஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 630 SoC உடன் இணைந்த 4GB ரேம் உடன் 64GB இன்டரனல் மெம்மரி பெற்றுள்ளது.

3000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 6 கருவியில் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டு இயக்கப்படுகின்றது.

நோக்கியா 6 (2018) மொபைல் விலை ரூ.16,999 ஆகும். வருகின்ற ஏப்ரல் 6 முதல் ஆன்லைன் , நோக்கியா மொபைல் ஸ்டோர் மற்றும் முன்னணி ரீடெயில்களிடம் கிடைக்க உள்ளது.

நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 பிளஸ், & நோக்கியா 6 (2018) விலை விபரம்