அக்டோபர் 19 : நோக்கியா 7 ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடுவருகின்ற அக்டோபர் 19ந் தேதி நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா 7 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த போன் போத்தீ அம்சத்தை பெற்றதாக வரவுள்ளது.

நோக்கியா 7 ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் நோக்கியா பிராண்டில் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 ஆகிய மொபைல்கள் விற்பனைக்கு செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக புதிய போன் ஒன்றை நோக்கியா 7 என்ற பெயரில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மொபைல் போன் 3GB RAM/ 32GB, 4GB RAM/ 32GB சேமிப்பு மற்றும் 6GB RAM/ 64GB சேமிப்பு ஆகிய மூன்று வேரியன்டில் கிடைக்கப்பெறுவதுடன், நோக்கியா 8 மொபைலில் இடம்பெற்றுள்ள OZO ஆடியோ மற்றும் போத்தீ நுட்பம் , குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்  கொண்டதாக இயக்கப்படலாம்.

இதுதவிர இந்த அரங்கில் 6ஜிபி ரேம் 128ஜிபி சேமிப்பு கொண்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. மேலும் நோக்கியா 2 பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யும் வாய்ப்புகளும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here