ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு செயல்படும் நோக்கியா மொபைல்கள் வரிசையில் புதிதாக நோக்கியா 7 மொபைல் போன் சீனாவில் இரண்டு விதமான ரேம், போத்தீ ஆகிய வசதியுடன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா 7 மொபைல் போன்

வருகின்ற அக்டோபர் 24ந் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு முன்பதிவு செய்யப்பட உள்ள நோக்கியா 7 இந்தியா உட்பட சர்வதேச சந்தைகளில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற விபரத்தை ஹெச்எம்டி குளோபல் குறிப்பிடவில்லை.

டிசைன் & டிஸ்பிளே

நோக்கியா 7 மொபைல் போனில் 5.2 அங்குல முழு HD IPS திரையுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டதாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் குறைந்த பெசல்-லெஸ் பெற்றிருப்பது குறிப்பிடதக்கதாகும்.

பிராசெஸர் & ரேம்

இந்த மொபைல் போனில் குவால்காம் ஸ்னாப்டிராபன் 630 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 4ஜிபி ரேம் 64 ஜிபி ரோம் மற்றும் 6ஜிபி ரேம் 128ஜிபி ரோம் கொண்டிருப்பதுடன் கூடுதலாக சேமிப்பு வசதியை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா துறை

கேமரா துறையில் பின்புறத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் f/1.8 உடன் இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ் கொண்டிருக்கின்றது. முன்புறத்தில் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள f/2.0 உடன் 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் போத்தீ எனப்படும் இரண்டு கேமராவையும் ஒரே சமயத்தில் இயக்கி புகைப்படத்தை பெறலாம்.

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தில் செயல்படும் நோக்கியா 7 மொபைல் போனில் 3000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

கூடுதல் துனை விருப்பங்களாக 4G LTE, வோல்ட்இ, வை-ஃபை 802.11 b/g/n/ac, ப்ளூடூத் 5.0, யூஎஸ்பி டைப் சி-போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை பெற்றுள்ளது.

விலை

நோக்கியா 7 4GB RAM+64GB – CNY 2499 (ரூ.24,600)

நோக்கியா 7 6GB RAM+128GB – CNY 2,699 (ரூ.26,500)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here