விரைவில் நோக்கியா 7 பிளஸ் மொபைலில் ஆண்டிராய்டு பை அப்டேட்

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட் போனில் ஆண்டிராய்டு 9 பை ஒஎஸ் அப்டேட் விரைவில் வர உள்ளதாகவும், நோக்கியா மொபைல்களில் இந்த அப்டேட் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது, கூகிள் அல்லாத ஒரு மொபைலில் இந்த அப்டேட் செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும் என்று ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் நோக்கியா 7 பிளஸ் மொபைலில் ஆண்டிராய்டு பை அப்டேட்

இதுகுறித்து பேசிய ஹெச்எம்டி நிறுவன உயர் அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொருவரும் ஆண்டிராய்டு 9 பை ஒஎஸ் அப்டேட்-ஐ விரும்புகின்றனர். எங்கள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்களான நோக்கியா 7 பிளஸ் மொபைலில் இந்த ஆண்டிராய்டு பை அப்டேட் இடம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் நோக்கியா 7 பிளஸ் மொபைலில் ஆண்டிராய்டு பை அப்டேட்

கூகிள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம், ஆண்டிராய்டு 9 பை ஒஎஸ்-ஐ அறிமுகம் செய்தது. இந்த ஒஸ் பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட நோட்டிபிகேஷன்களையும் கொண்டுள்ளது.