நோக்கியா 7 பிளஸ்
கடந்த 2017 ஆம் ஆண்டில் சுமார் 70 மில்லியன் ஸ்மார்ட்போன் கருவிகளை டெலிவரி வழங்கியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் முழு விஷன் டிஸ்பிளே பெற்ற நோக்கியா 7 பிளஸ் மொபைல் 6 அங்குல முழுதிரையுடன் EUR 399 (Rs. 31,750) வெளியிடப்பட்டுள்ளது.
டிசைன் & டிஸ்பிளே
ஒரிஜனல் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை பெற்று எவ்விதமான கஸ்டமைஸ் ஆப்ஷனும் வழங்கப்படாமல் வந்துள்ள நோக்கியா 7 பிளஸ் மொபைல் போன் 6 அங்குல முழு HD+ (1080×2160 பிக்சல் தீர்மானத்துடன் ) IPS டிஸ்பிளே பெற்றதாக 18:9 திரை விகிதம் கொண்டு கிளாஸ் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் வழங்கப்பட்டு செராமிக் பாடியை பெற்ற இந்த மொபைல் போன் கருப்பு உடன் இணைந்த காப்பர் மற்றும் வெள்ளை உடன் இணைந்த காப்பர் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கப் பெற உள்ளது.
பிராசெஸர் & ரேம்
குவால்காம் சிப்செட் தயாரிப்பாளரின் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 7 பிளஸ் கருவியில் 64GB உள்ளீட்டு சேமிப்பு திறனுடன் 4GB LPDDR4 ரேம் கொண்டு இயக்கப்படுகின்றது. கூடுலாக நினைவு திறனை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி அட்டை வாயிலாக 256GB வரை விரிவுப்படுத்த இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேமரா துறை
பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டப்பை வழங்கியுள்ள ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பிரசத்தி பெற்ற Zeiss optics கொண்டு செயற்க்கை நுண்ணறிவு பெற்ற ப்ரோ கேமரா மோடினை வழங்கியுள்ளது. இதில் 13 மெகாபிக்சல் செனாருடன் f/2.6 அப்ரேச்சர், 1 மைக்ரான் பிக்சல் 2X ஆப்டிகல் ஜூம் உடன் இணைந்த 12 மெகாபிக்சல் கேமரா என இரட்டை எல்இடி ஃபிளாஷை பெற்றுள்ளது.
முன்புறத்தில் f/2.0 அப்ரேச்சர் , 1 மைக்ரான் பிக்சல் கொண்ட 16 மெகாபிக்சல் ஃபிக்ஸ்டு ஃபோகஸ் கேமரா வழங்கப்பட்டு செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றதாக வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி
ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கியா 7 பிளஸ் மொபைல்போன் மிக வேகமாக சார்ஜிங் ஆகின்ற முறையான ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் கூடிய 3800mAh பேட்டரி 19 மணி நேர டாக்டைம் வழங்குவதுடன் 723 மணி நேர ஸ்டான்டு பை டைம் வழங்குகின்றது.
மற்றவை
நோக்கியா 7 ப்ளஸ் கருவியில் கூடுதல் மற்றும் அவசிய வசதிகளாக 4G VoLTE, வை-ஃபை 802.11ac, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS, என்எஃப்சி, USB Type-C (2.0), மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் டிஜிட்டல் காம்பாஸ், கைரேகை சென்சார், மிக சிறப்பான ஆடியோவை வெளிப்படுத்த 3 மைக் பெற்றதாக வந்துள்ளது.
விலை & வருகை விபரம்
2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐரோப்பா நோக்கியா 7 பிளஸ் விலை EUR 399 (Rs. 31,750) என நிர்னையம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா அறிமுகம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சர்வதேச அளவில் வருகின்ற ஏப்ரல் 2018 முதல் பல்வேறு நாடுகளில் புதிய நோக்கியா 7 ப்ளஸ் மொபைல் போன் கிடைக்க உள்ளதை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதைத்தவிர நோக்கியா பிராண்டில் நோக்கியா 1, நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) , நோக்கியா 8110 4ஜி போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது.