வருகின்ற பிப்ரவரி 25ந் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள நோக்கியா 7 பிளஸ் மொபைல் போனின் படங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது.

நோக்கியா 7 பிளஸ் மொபைல்

Photo Credit: Evan Blass/ Twitter

ஆண்ட்ராய்டு ஒன் 8.1 இயங்குதளத்தை பின்பற்றி மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையிலான அம்சத்தை கொண்டதாக நோக்கியா 7 பிளஸ் போன் 18:9 அஸ்பெக்ட் விகிதத்தை பெற்று முழுமையான 6 அங்குல ஹெச்டி டிஸ்பிளேவினை கொண்டதாக வரவுள்ளது.

குவால்காம் 660 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற வகையில் வெளியாக உள்ள இக்கருவியில் பின்புறத்தில் செங்குத்தான Zeiss optics 12 மெகாபிக்சல் சென்சார் பெற்ற இரட்டை கேமரா மற்றும் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 13 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

குவால்காமின் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டதாக வரவுள்ளது.

இந்த மொபைல் போனின் திரை மற்றும் பேட்டரி விபரங்கள் வெளியாகவில்லை என்றாலும், தகவல்களின் அடிப்படையில் 6 அங்குல உயர் தெளிவு திரையுடன் , 3000 எம்ஏஎச்-க்கு கூடுதலான ஆற்றலை பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

Photo Credit: NokiaAndroidPortugal/ Facebook

சோதனையில் சிக்கிய 4ஜிபி ரேம் மாடலை தவிர 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 7 பிளஸ் மாடலும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 24,000 க்கு தொடங்கலாம்.