ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டதாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

நோக்கியா 7 பிளஸ் மொபைல்

ஜீக்பெஞ்சு சோதனையில் சிக்கிய விபரங்களில் புதிய நோக்கியா 7 பிளஸ் மொபைலின் ரேம் மற்றும் பிராசெஸர் சிப்செட் விபரங்கள் கசிந்துள்ளது. ஆனால் டிஸ்பிளே மற்றும் முக்கிய வசதிகள் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த அக்டோபரில் சீனா சந்தையில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட போது மெட்டல் பாடியுடன் வெளிவந்த நோக்கியா 7 மொபைலில் 4ஜிபி ரேம் கொண்டதாக குவால்காமின் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டதாக வரவுள்ளது.

இந்த மொபைல் போனின் திரை மற்றும் பேட்டரி விபரங்கள் வெளியாகவில்லை என்றாலும், தகவல்களின் அடிப்படையில் 5.2 அங்குல உயர் தெளிவு திரையுடன் , 3000 எம்ஏஎச்-க்கு கூடுதலான ஆற்றலை பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

சோதனையில் சிக்கிய 4ஜிபி ரேம் மாடலை தவிர 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 7 பிளஸ் மாடலும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 24,000 க்கு தொடங்கலாம்.

வருகின்ற 25ந் தேதி பார்சிலோனிவில் நடைபெற உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் நோக்கியா 3310 4ஜி, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 6 (2018), நோக்கியா 9 மற்றும் நோக்கியா 10 ஆகிய மொபைல்களும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.