6 ஜிபி ரேம் உடன் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பை கொண்ட மாடலாக ரூ. 29,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் உடன்  64ஜிபி உள்ளடக்க மெமரி மாடல் விலை ரூ.26,999 ஆகும்.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய நோக்கியா 8.1 மொபைல் போன் மாடலில் 6.18 அங்குல முழு ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் 1080×2244 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த மொபைல் போனில் கிளாஸை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அம்சம் இடம் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு நோக்கியா 8.1 மொபைலில், குவால்காம் ஆக்டோ-கோர்  ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் கூடிய 6 ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் பெற்றுள்ளது. இந்த மொபைலில் உள்ள 4ஜிபி ரேம் உடன்  64ஜிபி சேமிப்பு மற்றும் 6ஜிபி ரேம் உடன்  128ஜிபி சேமிப்பு வழங்கப்பட்டு கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டையை 400 ஜிபி வரை பயன்படுத்தலாம்.

6 ஜிபி ரேம் உடன் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

பிரைமரியாக  12எம்பி மற்றும் 13எம்பி டூயல் ரியர் கேமரா உடன் எல்இடி பிளாஷ் ஆதரவு
மற்றும் செல்ஃபீ மற்றும் வீடியோ கால்களுக்கு 20 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய வழி வகுக்கின்றது.

18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 3500mAh பேட்டரியை கொண்டு செயல்படுகின்ற நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் டூயல் 4G, VoLTE, 3G, வை-ஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும USB Type C ஆகியவை உள்ளது. அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.