வருகின்ற பிப்ரவரி 25ந் தேதி பார்சிலோனாவில் தொடங்க உள்ள 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில், நோக்கியா 8 சிராக்கோ என்ற பெயரில் நோக்கியா 8 (2018) மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

நோக்கியா 8 சிராக்கோ

கடந்த 2006 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனத்தின் பிரிமியம் ரக பிராண்டாக அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 8800 சிராக்கோ மிக பெரிய அளவிலான மதிப்பை நோக்கியாவிற்கு பெற்று தந்த நிலையில், அதனை மறுதொடக்கமாக கொள்ள சிராக்கோ என பெயரிடப்பட்டுள்ளது.

ஹெச்எம்டி குளோபல் பிரிமியம் ரக சந்தையில் நிலைநிறுத்த அறிமுகம் செய்ய உள்ள நோக்கியா 8 சிராக்கோ போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு 6ஜிபிரேம் உடன் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

5.5 அங்குல திரையுடன், 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட மொபைலாக வரவஙுள்ள இந்த போனில்  ZEISS நிறுவனத்தின் துனையுடன் வடிவமைக்கபட்ட இரட்டை பின்புற கேமரா 12எம்பி+13எம்பி ஆகியவற்றை பெற்றிருப்பதுடன், முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 13 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை பின்புலமாக கொண்டு இயக்கப்படும். மேலும் நோக்கியா 8 சிராக்கோ ஆனது ஐபி67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழும் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகின்ற சர்வதேச மொபைல் காங்கிரசில் நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 9, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 3310 4G ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.