செல்பீ மோக பிரியர்களுக்கு கூடுதலாக வசதிகளை அதிகரிக்கும் வகையில் போத்தீ (Bothie) எனும் புதிய அம்சத்தை நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் செய்துள்ளது.

போத்தீ என்றால் என்ன ?

செல்ஃபீ படங்கள் பற்றி சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை என்றாலும் போத்தீ பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

போத்தீ என்றால் இரண்டு பக்க கேமராக்களையும் ஒரே சமயத்தில் இயக்கி படங்கள் மற்றும் வீடியோவினை பதிவு செய்யும் வகையிலான நுட்பத்தை நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நுட்பம் இரண்டு புறத்திலும் அமைந்துள்ள ஸ்மார்ட்போன் கேமராக்களை ஒரே சமயத்தில் இயக்கி படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்வதுடன் அதனை சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய இயலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள இரட்டை பின்பக்க 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்புற 13 மெகாபிக்சல் என இரண்டினையும் ஒரே சமயத்தில் இயக்கலாம், எனவே முன்புறத்தில் வழக்கம் போல செல்ஃபீ மற்றும் பின்புறத்தில் உள்ள காட்சிகளையும் இணைத்து காணொலி மற்றும் புகைப்படங்களை பெறலாம்.

முதற்கட்டமாக நோக்கியா 8 மொபைலில் இடம்பெற்றுள்ள இந்த நுட்பம் மற்ற நிறுவனங்களின் ஃபிளாக் ஷீப் மாடல்களிலும் எதிர்காலத்தில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.