நோக்கியா 9 பியூர் வியூ

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், நோக்கியா 9 பியூர் வியூ ஐந்து கேமரா லென்ஸ் பெற்றதாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்களில் பிப்ரவரி 24ந் தேதி வெளியிடப்பட உள்ளது. வெளிவருதற்க்கு முன்னதாக மொபைலின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க மொபைல் போன் மாடலாக வரவுள்ள நோக்கியா 9 பியூர் வியூ போனில் எதிர்பார்க்கப்படுகின்ற மிக முக்கியமான 5 கேமரா கொண்ட லென்ஸ் படங்களுடன் கூடிய விபரம் நோக்கியா பவர் யூஸ் இணையதளத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்றுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மாஃட்போனில் 5.99 அங்குல QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாக பெர்ஃபாமென்ஸ் பிரிவில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Nokia : நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள் வெளியானது

பட உதவி- npu

இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள பென்டா லென்ஸ் கேமரா மிக தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோவினை பதிவு செய்யும் திறனுடன் 5 விதமான ஷாட்களை பெற உதவும் என கூறப்படுகின்றது. பின்புற பேனல் பளபளப்பான தோற்றுத்துடன் காட்சிக்கு கிடைக்கின்றது.

நோக்கியா மொபைல் பிராண்டு தலைமை நிறுவனமாக விளங்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன்களை MWC 2019-ல் அறிமுகம் செய்ய இருக்கிறது.