மே 7-ல் நோக்கியா 4.2 , நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 9 ப்யூர்வியூ அறிமுகம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள நோக்கியா 4.2 , நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 9 ப்யூர்வியூ என மூன்று ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு மே 7 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்வதற்கான அனுமதியை BIS சான்றிதழை இந்நிறுவனம் பெற்றுள்ளது. குறிப்பாக பென்டா கேமரா எனப்படும் 5 கேமராக்களை கொண்ட நோக்கியா 9 ப்யூர்வியூ மிகுந்த கவனத்தை பெறக்கூடும்.

நோக்கியா 9 ப்யூர்வியூ விபரம்

5.99 அங்குல pOLED QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாக பெர்ஃபாமென்ஸ் பிரிவில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

பென்டா லென்ஸ் கேமரா முறையில் 12 மெகாபிக்சல் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் மூன்று மோனோகரோமேட்டிக் லென்ஸ் மற்றும் இரண்டு ஆர்ஜிபி லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 20 எம்பி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 3.2 அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

5.71 இன்ச் 1520×720 பிக்சல் 19:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்ட நோக்கியா 4.2 போனில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் கொண்டு இயக்கப்பட்டு 2 ஜிபி ரேம் 16 ஜிபி மெமரி மற்றும் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி மெமரி கொண்டதாக விளங்குகின்றது.

3000 Mah பேட்டரி கொண்ட நோக்கியா 4.2 போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF மற்றும் 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா உடன் வழங்கப்பட்டுள்ளது.