இந்தியாவில் நோக்கியா 9 ப்யூர்வியூ போன் அறிமுக விபரம் வெளியானது

கடந்த மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் 2019-ல் வெளியிடப்பட்ட நோக்கியா 9 ப்யூர்வியூ இந்தியாவில் அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் இந்த மொபைல் போன் ரூ. 46,999 விலை மதிப்பில் கிடைக்கின்றது.

நோக்கியா பவர் யூஸர் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய சந்தையில் இந்த மொபைல் போன் அறிமுகத்தை ஏப்ரல் மாத இறுதி நாட்களில் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நோக்கியா 9 ப்யூர்வியூ போன் சிறப்புகள்

ஸ்மார்ட்போன் சந்தையில் முதன்முறையாக 5 கேமரா சென்சார்களை பெற்றதாக விளங்குஃ நோக்கியாவின் 9 ப்யூர்வியு மாடலில் 5.99 அங்குல pOLED QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாக பெர்ஃபாமென்ஸ் பிரிவில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

இந்தியாவில் நோக்கியா 9 ப்யூர்வியூ போன் அறிமுக விபரம் வெளியானது

நோக்கியா 9 ப்யூர்வியூ கேமரா

பென்டா லென்ஸ் கேமரா முறையில் 12 மெகாபிக்சல் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் மூன்று மோனோகரோமேட்டிக் லென்ஸ் மற்றும் இரண்டு ஆர்ஜிபி லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 20 எம்பி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

4G வோல்ட்இ, வை-ஃபை, ப்ளூடூத் 5.0, GPS, AGPS, GLONASS, NFC மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ள இந்த போனில் 3,320mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளடக்கியுள்ளது.