சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019-ல் நோக்கியா 9 பியூர் வியூ , நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 3.2 , நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 210 என மொத்தம் ஐந்து மொபைல் போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நோக்கியா 210 மொபைல் போன் ஃபீச்சர் ரக மாடலாகும்.

உலகின் முதல் பென்டா-லென்ஸ் கேமரா பெற்ற நோக்கியா 9 பியூர் வியூ மாடலில் 12 எம்பி மோனோக்ரோம் சென்சார் பிரிவில் மூன்று கேமரா மற்றும் இரண்டு 12 எம்பி RGB சென்சார் கேமராவுடன் செல்ஃபீ படங்களுக்கு 20எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் விபரங்கள்

பிரிமியம் ரகத்தில் வெளிப்படுத்தியுள்ள நோக்கியா 9 மாடலில் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசெஸருடன் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு செயல்படுகின்றது. இந்த போனில் வழங்கப்பட்டுள்ள 5 கேமரா லென்ஸ் முறையை பென்டா-லென்ஸ் கேமரா முறை என குறிப்பிடப்படகின்றது.

கேமரா பிரிவில் வழங்கப்பட்டுள்ள பின்புற 5 கேமராக்கள், உயர்தரமான படங்களை பிடிப்பதற்கு என பிரத்தியகமான Zeiss சான்றிதழ் பெற்ற லென்ஸ் அமைப்புகளுடன் வந்துள்ளது. 12 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் பிரிவில் மூன்று கேமராக்களும் மற்றும் இரண்டு 12 மெகாபிக்சல் RGB சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் செல்ஃபீ படங்களுக்கு 20 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ போனில் 5.99 அங்குல Quad-HD+ (1440×2960 பிக்சல்ஸ்) P-OLED திரையை கொண்ட இந்த போனின் கண்ணாடியை விரிசல்கள் மற்றும் கீறல்களில் இருந்து பாதுகாக்க கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா  பியூர் வியூ மொபைல் போன்  3,320mAh பேட்டரியுடன் ஐபி 67 தரச் சான்றிதழ் மூலம் தூசு மற்றும் நீரிலிருந்து பாதுகாக்க முடியும். இதன் கேமரா திறன் மற்ற மொபைல் போன்களை விட அதி நவீன நுட்பமாக விளங்குகின்றது.

நோக்கியா 9 பியூர் வியூ மொபைல் விலை ரூ. 49,700 (தோரயமான மதிப்பு). இந்திய விலை மற்றுஃ வருகை விபரம் அறிவிக்கப்படவில்லை.

நோக்கியா 1 பிளஸ் மொபைலின் சிறப்புகள்

ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான கோ எடிசன் மாடலாக அமைந்துள்ள நோக்கியா 1 பிளஸ் போனில் 5.45 அங்குல FWVGA IPS திரையை கொண்டுள்ளது. இந்த போனை இயக்குவதற்கு மீடியாடெக் MT6739WW SoC கொண்ட 1 ஜிபி ரேம் உடன் 16 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது.

கேமரா பிரிவில் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 8 எம்பி சென்சார் மற்றும் 5 எம்பி சென்சார் வீடியோ மற்றும் செல்ஃபீ படங்ளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 2,500mAh பேட்டரியுடன் 4ஜி, வை-ஃபை , ப்ளூடுத் ஆதரவுகளுடன் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் மார்ச் முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

நோக்கியா 1 பிளஸ் மொபைல் ரூ.7000 (தோராயமான) ஆகும்.

நோக்கியா 3.2 மொபைல் அம்சங்கள்

நோக்கியா 3.2 மொபைல் போன் ஆனது ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை பின்பற்றி 2 ஜிபி மற்றும் 3 ஜிபி என இரு ரேம் மாறுபாடுகளில் கிடைக்கின்றது.

நோக்கியா 3.2 மொபைல் போனில் 6.26 அங்குல HD+ (720×1520 பிக்செல்ஸ்) தீர்மானத்தை கொண்டதாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 பிராசெஸருடன் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி என இரு ரேம் மாறுபாட்டில் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்பை கொண்டதாக உள்ளது.

கேமரா பிரிவில் 13எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவை கொண்டு 4000mAh பேட்டரி கொண்ட இந்த போனின் 32 ஜிபி மெமரி பெற்ற வேரியன்டில் கைரேகை சென்சார் உள்ளது.

நோக்கியா 3.2 போனின் 2GB + 16GB மாடல்  $139 (தோராயமாக Rs. 9,900) மற்றும் 3GB + 32GB $169 ( தோராயமாக ரூ.. 12,000) ஆகும்.

நோக்கியா 4.2 விபரங்கள் மற்றும் வசதிகள்

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனில் 5.71 அங்குல HD+ (720×1520 பிக்செல்ஸ்) தீர்மானத்தை கொண்டதாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசெஸருடன் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி என இரு ரேம் மாறுபாட்டில் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்பை கொண்டதாக உள்ளது.

கேமரா பிரிவில் 13 எம்பி பிரைமரி கேமரா உடன் 2 எம்பி கேமரா என டூயல் செட்டப் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவை கொண்டு 3000mAh பேட்டரி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

நோக்கியா 3.2 போனின் 2GB + 16GB மாடல்  $169 (தோராயமாக Rs. 12,000) மற்றும் 3GB + 32GB $19 ( தோராயமாக ரூ.. 14,200) ஆகும்.

நோக்கியா 210 போன் விபரம்

ஃபீச்சர் ரக நோக்கியா 210 போனில் டுயல் சிம் கார்டு ஆதரவுடன் S30+ இயங்குதளத்தை பெற்று 2.4 அஙுகுல QVGA (240×320 பிக்சல்ஸ்) கொண்டுள்ளது. இந்த போனில் VGA கேமரா சென்சாருடன் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. இது 1,020mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகிறது. இந்த மொபைல் போனில் ஒப்ரோ பிரவுசர் பெற்றுள்ளது.

நோக்கியா 210 மொபைல் விலை ரூ.2,500 ஆகும்.