நோக்கியா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் அடுத்த பிரிமியம் ரக மாடலாக நோக்கியா 9 விளங்க உள்ளது. நோக்கியா 9 மொபைல் போன் படங்கள் மற்றும் கேமரா விபரம் வெளியாகியுள்ளது.

நோக்கியா 9 ஸ்மார்ட்போன்

முழு பார்வை திரை பெற்றதாக வரவுள்ள நோக்கியா 9 OLED கிளாஸ் கொண்டதாக பின்புறத்தில் இரட்டை காரல் ஜெய்ஸ் கேமரா செட்டப் பெற்றதாக விளங்க உள்ளது.

உயர்தரத்திலான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்யும் வகையில் அமைந்திருக்கின்ற பின்புற இரட்டை கேமரா செட்டப் 13 மெகாபிக்சல் சென்சார் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மொபைலின் கேமரா செட்டப் கீழாக கைரேகை சென்சார் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக கோல்டு நிறத்தில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது முழுமையான நீல நிறத்தில் வெளியாகியுள்ள நோக்கியா 9 மொபைலில் எதிர்பார்க்கப்படுகின்ற பிராசெஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டதாக 6GB அல்லது 8GB ரேம் பெற்றதாக உடன் 128ஜிபி சேமிப்பு பெற்றதாக வரக்கூடும். மேலும் IP68 தரச்சான்றிதழ் பெற்றதாக நீர் மற்றும் தூசு ஆகியவற்றை பாதுகாப்பு அம்சத்துடன் கொண்டதாக வரவுள்ளது.

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ரூ.58,000 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.