வருகின்ற பிப்ரவரி மாத இறுதியில் பார்சிலோனாவில் தொடங்க உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 கண்காட்சியில் புதிய நோக்கியா 9, நோக்கியா 1 ஓரியோ கோ எடிஷன், நோக்கியா 7 உட்பட பல்வேறு முக்கிய விபரங்களை நோக்கியா அறிவிக்க தயாராகி வருகின்றது.

2018 நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் நோக்கியா பிராண்டில் பல்வேறு மாடல்கள் விற்பனைக்கு வெளியாகியுள்ள நிலையில் உயர் ரக ஃபிளாக்‌ஷாப் கில்லர் மாடலாக நோக்கியா 9 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 25ந் தேதி ஹெச்எம்டி வெளியிட உள்ளதாக மீடியாக்களுக்கு அழைப்பிதழை அனுப்பியுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் நோக்கியா 9 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டதாக , 5.3 இன்ச் குவாட் உயர் தெளிவு காட்சி திரை 2560×1440 பிக்சல் தீர்மானத்துடன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இதனுடன் 13 மெகாபிக்சல் சென்சார் இரட்டை பின்புற கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, முன்பக்கம் 12 மெகாபிக்சல் சென்சார் அல்லது 8 மெகாபிக்சல் சென்சார் செல்ஃபி கேமரா மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முழுமையான நுட்பவிபரங்கள் மற்றும் புதிய மொபைல்கள் பற்றி அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.