விரைவில் நோக்கியா N9 மொபைல் போன் அறிமுகம் ?

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், தொடர்ந்து நோக்கியா பிராண்டின் முந்தைய தலைமுறை நோக்கியா 3310, நோக்கியா 8110, சிராக்கோ ஆகிய மாடல்களை போல நோக்கியா N9 மாடலை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மே 2ந் தேதி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா N9 மொபைல்

 

நோக்கியா பிராண்டில் வெளியன நோக்கியா என் வரிசை மொபைல் போனில் நோக்கியா என்9 மாடல் மே 2ந் தேதி வெளியாகலாம் என சீன சமூக வலைதளமான வீப்போ வாயிலாக வெளிவந்துள்ளது.

இந்த மொபைல் போன் குறித்து எவ்விதமான நுட்ப தகவலும் இல்லை, இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த போன் மிக சிறப்பான கேமரா திறன் மற்றும் சிப்செட் கொண்டதாக பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும் மே 16ந் தேதி நோக்கியா X அல்லது நோக்கியா X6 ஸ்மார்ட்போன் 5.8 அங்உல திரையை பெற்றதாக  இரு விதமான வேரியன்ட்கள் இடம்பெற்றிருக்கலாம், ஒன்று 4ஜிபி ரேம் பெற்ற மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் கொண்ட மாடல் மற்றொன்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் பெற்றதாக வரக்கூடிய மாடலில் 6ஜிபி ரேம் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.