நோக்கியா எக்ஸ் மொபைல் படங்கள் வெளியானது

வருகின்ற மே 16ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புத்தம் புதிய நோக்கியா X6 ஸ்மார்ட்போன் மாடலின் புகைப்படங்க்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நோக்கியா எக்ஸ் மிக நேர்த்தியான முழு அளவு காட்சி திரையை கொண்டதாக விளங்குகின்றது.

நோக்கியா X6

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படும் நோக்கியா பிராண்டின் புதிய வரிசையாக நோக்கியா X இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது,. சமீபத்தில் வெளியாகியுள்ள படங்களில் வாயிலாக நோக்கியா எக்ஸ் 6 ஐபோன் X போன்ற தோற்ற அமைப்பிற்கு ஈடான அம்சத்தை கொண்டதாக விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் பற்றிய எவ்விதமான நுட்ப விபரங்கள் இது வரை வெளியாகவில்லை, இந்த மொபைல் 5.8 அங்குல திரையை பெற்று 19:9 ஆஸ்பெக்ட் திரை விகிதத்தை கொண்டிருக்கும். வெளியாகியுள்ள படங்களின் வாயிலாக இந்த போனில் பின்புற பகுதியில் இரட்டை ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா செட்டப் மற்றும் கைரேகை சென்சார் அமைந்திருக்கின்றது.

மேலும் இந்த மாடலில் இரு விதமான வேரியன்ட்கள் இடம்பெற்றிருக்கலாம், ஒன்று 4ஜிபி ரேம் பெற்ற மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் கொண்ட மாடல் மற்றொன்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் பெற்றதாக வரக்கூடிய மாடலில் 6ஜிபி ரேம் பெற்றிருக்கலாம்.

நோக்கியா X6 விலை

4ஜிபி ரேம் – 16,900

6ஜிபி ரேம் – ரூ. 19,000

(எதிர்பார்க்கப்படும் விலை)