நோக்கியா X6 மொபைல் போன் வெளியானது

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், புதிதாக நோக்கியா X வரிசை போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் சீனாவில் பிரத்தியேகமாக நோக்கியா X6 ஸ்மார்ட்போன் மாடல் ஐபோன் X தோற்றத்தை பின்புலமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா X6 மொபைல்

நோக்கியா X6 மொபைல் போன் வெளியானது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வரிசையில் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியான ஐபோன் X மாடலின் தோற்றத்தை உந்துதலாக கொண்ட விவோ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது நோக்கியா பிராண்டு மொபைலிலும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நோக்கியா எக்ஸ்6 மொபைல் போன்  5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்ஸ்) அம்சத்தை பெற்ற 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக நாட்ச் டிசைன் அம்சத்தை பெற்றதாக அமைந்துள்ள இந்த போனில் இரட்டை கேமரா செட்டப் பின்புறத்தில் பெற்று 16 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா X6 மொபைல் போன் வெளியானது

முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டு குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள மொபைலில் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என இருவிதமான ரேம் பெற்று 32GB/64GB என மொத்தமாக மூன்று வேரியண்டை கொண்டுள்ளது.

க்விக் சார்ஜ் 3.0 கொண்டு செயல்படுகின்ற நோக்கியா எக்ஸ்6 மொபைல் 3,060 mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு நீலம், கருப்பு மற்றும் சில்வர் நிறங்களை பெற்று சீனாவில் நோக்கியா எக்ஸ் 6  CNY1,299 (ரூ.13,800) மற்றும் 4GB/64GB வேரியன்ட் விலை CNY1,449 (ரூ.15,980), மேலும் 6GB/64GB வேரியன்ட் CNY1,699 (ரூ.18,000) ஆகும்.

நோக்கியா X6 மொபைல் போன் வெளியானது

நோக்கியா X6 மொபைல் போன் வெளியானது