நோக்கியா X6 ஸ்மார்ட்போன் விலை விபரம் கசிந்தது

வருகின்ற மே 16ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் படங்கள் மற்றும் நுட்ப விபரம் போன்றவை பரவலாக வெளிவந்த நிலையில் 4ஜிபி ரேம் பெற்ற நோக்கியா எக்ஸ்6 விலை விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா X6 ஸ்மார்ட்போன்

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் விலை விபரம் கசிந்தது

முழு காட்சி திரையை பெற்றதாக வரவுள்ள நோக்கியா எக்ஸ்6 மொபைல் போன் 5.8 அங்குல திரையை பெற்று  2280 x 1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டு 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் பெற்று 32 ஜிபி சேமிப்பு அல்லது 64 ஜிபி சேமிப்பு ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கப் பெறலாம்.

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் விலை விபரம் கசிந்தது

பின்புறத்தில் செங்குத்தான இரட்டை 16 மெகாபிக்சல் சென்சார் கொண்ட எல்இடி ஃபிளாஷ் பெற்று விளங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி 3000mAh பேட்டரி கொண்டதாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா எக்ஸ்6 4ஜிபி ரேம் விலை ரூ. 15,969 (RMB 1499) ஆகும்.

ஐபோன் X தோற்ற அமைப்பினை உந்துதலாக கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் விலை மற்றும் கேமரா, நுட்பம் தொடர்பான பல்வேறு விபரங்கள் மே 16ந் தேதி அதிகார்வப்பூர்வமாக வெளியாக உள்ளது.