நோக்கியா x71

வரும் ஏப்ரல் 2ம் தேதி நோக்கியா X71 ஸ்மார்ட்போன் மாடலை 48 எம்பி கேமரா கொண்டதாக தாய்வான் நாட்டில் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக ஹெச்எம்டி குளோபல் அறிவித்துள்ளது.

நடுத்தர பிரீமியம் மாடலாக விளங்க உள்ள நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் கேமரா மற்றும் கூடுதலாக 120 டிகிரி கோ அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் கேமராவுடன் விளங்கும் என கூறப்படுகின்றது.

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் சிறப்புகள்

ZEISS ஆப்டிக்ஸ் ஆதரவை பெற்றதாக வரவுள்ள நோக்கியா எக்ஸ்71 ஃபோனில் 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும்  கூடுதலாக 120 டிகிரி கோ அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் பெற்றிருக்கும். மேலதிக கேமரா தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகவில்லை.

6.22 அங்குல கொண்ட இந்த திரையில் செல்பி கேமரா பிரிவுக்கு என திரையில் பஞ்ச் ஹோல் (hole punch) வழங்கப்பட்டுள்ளது. இந்த போனை இயக்க குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் இடம்பெற்றிருக்கலாம்.  மேலதிக விபரம் மற்றும் விலை போன்றவை ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் தாய்வானில் பென்டா கேமரா பெற்ற நோக்கியா 9 பியூர் வியூ மாடலும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக தெரிகின்றது. முதன்முறையாக 48 மெகாபிக்சல் கேமரா சென்சார் பெற்ற மாடலாக நோக்கியா X71  விளங்க உள்ளது.