ஸ்மார்ட்வாட்ச் என்றால் வாட்சாகவும், போன் என்றால் ஸ்மார்ட்போனாக செயல்படும் நூபியா ஆல்ஃபா (nubia α) கேட்ஜெட்ஸை இசட்டிஇ நிறுவனத்தின் நூபியா பிராண்டில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019-ல் வெளிப்படுத்தப்பட்டது.

கைகளில் அணியக்கூடிய முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நூபியா ஆல்ஃபா ஸ்மார்ட்வாச் ஆக செய்ல்படுகின்றது. மேலும் தேவை ஏற்பட்டால் இ-சிம் உதவியுடன் ஸ்மார்ட்போனாக அழைப்புகள் வீடியோகாலிங் , உட்பட குறுஞ்செய்தி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

Nubia Alpha சிறப்புகளும் வசதிகளும்

இசட்டிஇ நிறுவனம் 5ஜி மொபைல்கள் உட்பட நூபியா பிராண்டில் வெளியிட்டுள்ள இந்த ஆல்ஃபா கருவி பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரேஸ்லெட் போல கைகளில் அணிந்துக் கொள்ளக்கூடிய இந்த போனில் உள்ள சிறப்புகளில் மிக முக்கியமானதை தொடர்ந்து காணலாம்.

4 அங்குல ஃபிளெக்சிபல் OLED திரையை கொண்டுள்ள இந்த ஆல்ஃபா வாட்சில் திரையை கட்டமைக்க Visionox உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாட்ச் நிலையில் மிக நீளமான திரையை கொண்டு 36:9 ஆஸ்பெக்ட் விகிதம (960 x 192px தீர்மானம்) கொண்டுள்ளது.

நூபியா α கருவியை இயக்க ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசெஸர் பெற்று 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்றுள்ளது. இதில் 1000 பாடல்கள் வரை சேமிக்க இயலும். கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த வாட்சில் கெஸ்ட்யூர், AIM (Air Interaction Mechanics) இடம்பெற்றுள்ளது.

நுபியா ஆல்ஃபா ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்வாட்ச் பயனை தொடர்ந்து இதுவே ஸ்மார்ட்போன் மாடலாக செயல்படும், அப்படினா.. செல்ஃபி எடுக்கலாமா என்ற கேள்வி எழுகிறதா ? ஆம் என்றால் அதற்கு கேமரா ?  5 எம்பி கேமரா வழங்கப்பட்டு வீடியோ காலிங் மற்றும் செல்ஃபீ படங்களை பெறலாம்.

ஆல்ஃபா கருவியில் இ-சிம் கார்டு கொண்டு செயல்பட்டு, வாய்ஸ் காலிங் , 4ஜி எல்டிஇ முறையில் மேற்கொள்ளலாம். இதுதவிர வீடியோ காலிங், உட்பட செல்ஃபி படங்களை பெற 5 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ப்ளூடுத் மற்றும் வை-ஃபை மூலம் இணையத்தை பெறலாம்.

நுபியா ஆல்ஃபா வாட்ச் போனில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், 18K கோல்டு பிளேட்டிங் என இரு முறையில் கிடைக்கின்றது. நீரிலிருந்த பாதுகாக்க வாட்டர் ரெசிஸ்டென்ட் இடம்பெற்றுள்ளது.

இ-சிம் என்றால் என்ன ?

E-SIM என்றால் மொபைல் சாதனத்தில் உடன் வடிவமைக்கப்பட்ட சிம் அட்டை ஆகும். இந்த இ-சிம் கார்டு என்பது பிசிக்கல் அட்டையாக இருக்காது. இது மொபைல் போனின் சிப்செட் உடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பதனால் இதனை நீக்க இயலாது. இ-சிம் கார்டு மூலம் ஆப்ரேட்டர் மற்றும் சேவைகளை தேர்ந்தெடுக்கலாம்.

நூபியா ஆல்ஃபா ப்ளூடூத் மாடல் விலை ரூ. 36,400 (€450) ஆகும் இந்த மாடலை தவிர இ-சிம் ஆதரவை பெற்ற ஆல்பா விலை ரூ. 44,500 (€550) , 18 கே கோல்டு பிளேட்டிங் கொண்ட நுபியா α விலை ரூ. 52,600 (€650). இந்த கருவி ஏப்ரல் மாதம் முதல் சந்தையில் கிடைக்க உள்ளது.

நூபியா ஆல்ஃபா வீடியோ