ரூ.6,999 விலையில் நூபியா N1 லைட் ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 5.5 அங்குல் டிஸ்பிளே பெற்ற 2ஜிபி ரேம் கொண்ட மொபைலாக நூபியா என்1 லைட் விளங்குகின்றது.

நூபியா N1 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.6,999

 நூபியா N1 லைட்

ZTE நிறுவனத்தின் நூபியா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலான என்1 லைட்  ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட நூபியா 4.0 தளத்தில் செயல்படுவதுடன் 5.5 அங்குல எச்டி டிஸ்பிளே 720×1280 பிக்சல் தீர்மானத்துடன், குவாட்கோர் 4xA53 1.25GHz பிராசஸருடன் கூடிய 2ஜிபி ரேம் பெற்று செயல்படுவதுடன், 16 ஜிபி உள்ளடங்கிய மெமரியை பெற்றதாக வந்துள்ளது. கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வகையிலான மைக்ரோஎஸ்டி அட்டை பொருத்தலாம்.

பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4P பிரிசிஷன் ஆப்டிக்கல் லென்ஸ், f/2.0 போன்றவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில்  செல்ஃபீ படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

நூபியா N1 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.6,999

நீக்க இயலாத வகையிலான 3000mAh திறன் கொண்ட நூபியா N1 லைட் ஸ்மார்ட்போனில் மற்ற விருப்பங்களாக 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 4.0, மற்றும் யூஎஸ்பி போன்றவற்றை கொண்டுள்ளது.

இன்று பகல் 12 மணிமுதல் அமேசான் தளத்தில் ரூ.6,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here