சீனாவின் ZTE நிறுவனத்தின் புதிய இசட் 17 மாடலின் மினி ஸ்மார்ட்போன் மாடலாக விளங்கும் ZTE நுபியா Z17 மினி மொபைல் ரூ.19,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ZTE நுபியா Z17 மினி ஸ்மார்ட்போன் விலை ரூ.19,999

ZTE நுபியா Z17 மினி

வருகின்ற ஜூன் 12ந் தேதி மாலை 5 மணிக்கு அமேஸான் தளத்தில் எக்ஸ்குளூசிவாக ஃபிளாஷ் விற்பனை தொடங்கப்பட உள்ளது. ZTE நுபியா இசட்17 மினி மொபைல் சிறப்பம்சங்களை காணலாம்..!

டிசைன் மற்றும் டிஸ்பிளே

நூபியா Z17 மினி மொபைல் யூனிக்மெட்டல் பாடி டிசைனுடன் இந்த ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் திரையுடன் 1080×1920 பிக்சல் தீர்மானத்தை 421ppi பிக்சல் அடர்த்தியை பெற்றிருப்பதுடன் 2.5டி வளைந்த கிளாஸ் பெற்றதாக வந்துள்ளது.

பிராசஸர் மற்றும் ரேம்

ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்பையாக கொண்ட நூபியா  UI 4.0 செயல்படுகின்ற நூபியா இசட்17 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட் பிராசஸர் பெற்று 4GB ரேம் மற்றும் 6GB ரேம் வழங்கப்பட்டு உடன் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்று கூடுதலாக நினைவகத்தை நீட்டிக்க 200ஜிபி மைக்ரோஎஸ்டி ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது 4ஜிபி ரேம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ZTE நுபியா Z17 மினி ஸ்மார்ட்போன் விலை ரூ.19,999

கேமரா

4K வீடியோ பதிவு செய்யும் வகையிலான 13 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமராவில் சோனி  IMX258 சென்சார், f/2.2 அபெர்ச்சர், எல்டிஇ ஃபிளாஷ் உள்ளது. மேலும் இதில் உள்ள சென்சார் வாயிலாக மோனோக்ரோம் மற்றும் RGB ஷாட்ஸ்களை பெற வழிவகுக்கின்றது. முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபீ படங்களை எதிர்கொள்ள 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

நீக்கும் வகையிலான அமைப்பை பெற்ற 2,950mAh பேட்டரியால் இயக்கப்படுகின்ற கருவியாக அமைந்துள்ளது. இந்த பேட்டரி சார்ஜ் முறைக்கு மிக வேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் முறை வழங்கப்பட்டுள்ளது.

மற்ற விருப்பங்கள்

இரட்டை சிம் கார்டு, 4G LTE மற்றும் VoLTE உடன் வை-ஃபை 802.11/b/g/n/ac (dual-band), புளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி போன்றவற்றை பெற்றுள்ளது.

விலை

வருகின்ற ஜூன் 12ந் தேதி வழியாக அமேஸான் எக்ஸ்குளூசிவாக விற்பனைக்கு கிடைக்க உள்ள நூபியா Z17 மினி ரூ.12,999 விலையில் கிடைக்கும். nubiaz17mini.com வாயிலாக முன்பதிவு செய்யப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here