ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் அடுத்த ஃபிளாக் ஷீப் கில்லராக களமிறங்க உள்ள ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படுகின்ற 5 சிறப்பு வசதிகள் என்ன என்பதனை இங்கே காணலாம்..

ஒன்ப்ளஸ் 5 எதிர்பார்க்கப்படும் 5 சிறப்பம்சங்கள்..!

ஒன்பிளஸ் 5 மொபைல்

1. டீசரில் 5 காட்சி தருகின்றது..

ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின் நிழல் படத்தை கவனியுங்கள் அதில் ஒன்பிளஸ் 5 காட்சி தருவதாக குறிப்பிட்டு வெளியிட்டுள்ள நிலையில் மிகவும் முக்கிய அம்சமாக இந்த ஸ்மார்ட்போன் மிகவும் தட்டையாக இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

2.  835 எஸ்ஓசி

மிகவும் தட்டையான மற்றும் சக்திவாய்ந்த பிராசஸராக விளங்குகின்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி பெற்ற ஒன்பிளஸ்5 கருவியில் இடம்பெற்றிருக்கும்.

ஒன்ப்ளஸ் 5 எதிர்பார்க்கப்படும் 5 சிறப்பம்சங்கள்..!

3. கேமரா

கேமரா பிரிவில் ஏறக்குறை பின்புறத்தில் டூயல் கேமரா இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. DxO உடன் இணைந்து கேமரா தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் மிக அழகான புகைப்படங்களை பெறலாம். எம்பி பற்றி விபரங்கள் வெளியாகவில்லை, சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேமராவின் மாதிரி படம் வெளியானது அது இங்கே வழங்கப்பட்டுள்ளது. கேமராவிற்கான கோஷம் Dual Camera. Clearer Pictures  என வழங்கப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 5 எதிர்பார்க்கப்படும் 5 சிறப்பம்சங்கள்..!

4. நுட்ப விபரம்

5.5 அங்குல QHD டிஸ்பிளே பெற்று 1440×2560 பிக்சல் தீர்மானத்துடன் 835 சிப்செட் பெற்ற ஸ்மார்ட்போனாக வரவுள்ளது. 64ஜிபி உள்ளடங்கிய மெமரி ஆப்ஷனை பெற்றிருக்கும்.

ஒன்ப்ளஸ் 5 எதிர்பார்க்கப்படும் 5 சிறப்பம்சங்கள்..!

5. வருகை மற்றும் விலை

ஜூன் 15ந் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்ப்ளஸ்5 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ. 28,500 ல் தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here