இந்தியாவில் ஒன்ப்ளஸ் 5 ஜூன் 22ந் தேதி அறிமுகம்..!

பிரபலமான ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக் ஷிப் கில்லர் மாடலாக வரவுள்ள ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் ஜூன் 22ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளதை உறுதி செய்துள்ளது.

ஒன்ப்ளஸ் 5 இந்தியா வருகை

சீனாவில் ஜூன் 20ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஒன்ப்ளஸ் 5 இந்திய சந்தையில் ஜூன் 22ந் தேதி மும்பையில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

5.5 அங்குல QHD டிஸ்பிளே பெற்று 1440×2560 பிக்சல் தீர்மானத்துடன் 835 சிப்செட் பெற்ற ஸ்மார்ட்போனாக வரவுள்ளது. 64ஜிபி உள்ளடங்கிய மெமரி ஆப்ஷனை பெற்றிருக்கும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த ஸ்மார்ட்போனில் டிஎக்ஸோ உடன் இணைந்து சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பெறும் வகையிலான 23 எம்பி கேமரா வழங்கப்பட்டிருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 3,300mAh திறன் கொண்ட பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் டேஸ் நுட்பத்தினை கொண்டதாக இருக்கும்.

ஒன்ப்ளஸ்5 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ. 28,500 ல் தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

Recommended For You