இந்தியாவின் முதல் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 SOC பெற்ற ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 5 வரவுள்ளதாக குவால்காம் இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 SOC
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் மாடல்கள் தனது சொந்த பிராசஸர் Exynos 8895 வாயிலாகவே இயக்கப்படுகின்றது. இந்தியாவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை.
சமீபத்தில் குவால்காம் இந்தியா தலைவர் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 835 SOC பிராசஸர் பெற்ற மாடல் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது அதனை உறுதிப்படுத்தும் வகையில் குவால்காம் இந்தியா வெளியிட்டுள்ள டிவிட்டில் இதனை உறுதி செய்துள்ளது. எனவே இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி பெற்ற சக்திவாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்தும் மாடலாக ஒன்ப்ளஸ் 5 அமைய உள்ளது.
ஆனால், சோனி நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதிய 835 பிராசஸர் பெற்ற முதல் சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம் மாடலை இந்தியாவில் வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளதால், எந்த மொபைல் முதலில் வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்பொழுது சர்வதேச அளவில் குவால்காம் ஸ்னாப்டிராகன்835 எஸ்ஓசி பெற்ற ஸ்மார்ட்போன்களாக விற்பனையில் உள்ளவை கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் , சியோமி Mi6 , சார்ப் அகுவாஸ் R மற்றும் சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம் போன்றவை ஆகும்.