22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது

2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சீனாவின் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின், புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த 22 நாட்களில் 10 லட்சம் மொபைல்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்

லன்டனில் மே 16ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 மொபைல் போன், மே 17ந் தேதி ஒன்பிளஸ் 6 இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த போன் மே 22ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரூ.34,999 விலையில் இந்தியாவில் வெளியானது.

6.28 அங்குல Full HD+ திரையை கொண்ட ஒன்பிளஸ் 6 மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி இரண்டு உள்ளீட்டு மாறுபாட்டில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

16 மற்றும் 20 மெகாபிக்சல் என டூயல் கேமரா கொண்ட பிரைமரி ஆப்ஷனுடன், 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி OxygenOS கொண்ட ஒன்பிளஸ் 6 மொபைல் 3,300mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு மிட்நைட் கருப்பு, கருப்பு, மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.

இதைத் தவிர ஒன்பிளஸ் 6 மார்வெல் அவென்ஜர்ஸ் எடிஷன் என்ற பெயரில் 8ஜிபி ரேம் 256ஜிபி கொண்ட மாடல் ரூ.44,999 விலையில் கிடைக்கின்றது. ஒன் பிளஸ் 6 6ஜிபி ரேம் 64ஜிபி மாடல் ரூ. 34,999 மற்றும்  8ஜிபி ரேம் 256ஜிபி மாடல் ரூ. 39,999 ஆகும்.