ரூ.34,499 விலையில் ஒன்பிளஸ் 6 மொபைல் விற்பனைக்கு வெளியானது

சர்வதேச அளவில் ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் , புத்தம் புதிய ஐபோன் X தோற்ற வடிவ உந்துதலில் வடிவமைக்கப்பட்ட புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்ப்ளஸ் 6 மொபைல் ரூ. 34,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்

ரூ.34,499 விலையில் ஒன்பிளஸ் 6 மொபைல் விற்பனைக்கு வெளியானது

லண்டனில் நடைபெற்ற விழாவில் ஒன்பிளஸ் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக நேரத்தியான ஐபோன் X டிசைன் பின்புலத்தை பெற்று வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாடல் மொத்தம் 2 விதமான ரேம் மற்றும் மூன்று விதமான ஸ்டோரேஜ் பெற்ற மாடலாக வெளியாகியுள்ளது.

6.28-அங்குல full-HD+ (1080×2280 பிக்சல்ஸ்) முழு ஆப்டிக் AMOLED டிஸ்பிளே கொண்டதாக 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டு பாதுகாப்பு சார்ந்த கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பெற்று விளங்குவதுடன், குவால்கம் நிறுவனத்தின் 2.8GHz ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் பெற்று விளங்குகின்றது.

ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை பின்பற்றிய ஆக்சிஜன் ஓஎஸ் 5.1 கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைல் போனில் 3300mAh பேட்டரி கொண்டு மிக விரைவாக சார்ஜிங் செய்யும் முறையான இந்நிறுவனத்தின் டேஸ் சார்ஜ் நுட்பம் கொண்டதாக விளங்குகின்றது.

ஒன்பிளஸ் 5டி மொபைலில் உள்ளதை போன்ற இரட்டை கேமரா செட்டப் கொண்ட இவற்றில் 16 மெகாபிக்சல் சோனி IMX519 கேமரா மற்றும் 20 மெகாபிக்சல் சோனி IM376K பெற்றதாக விளங்குகின்ற இவற்றில் இரட்டை எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் செல்பி படங்களை எதிர்கொள்ள 16 மெகாபிக்சல் சோனி IMX371 கேமரா பொருத்தப்பட்டு பல்வேறு அம்சங்களை கொண்டதமாக வந்துள்ளது. இந்த கேமரா ஸ்லோ மோஷன் வீடியோ பதிவு செயும் அம்சத்துடன் கூடுதலாக வீடியோ எடிட்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

ரூ.34,499 விலையில் ஒன்பிளஸ் 6 மொபைல் விற்பனைக்கு வெளியானது

இந்த மொபைலில் 0.2 விநாடிகளில் திறக்கும் கைரேகை சென்சார் மற்றும் 0.4 விநாடிகளில் திறக்கும் ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்களை பெற்று விளங்கும் , இந்த மொபைலில் இரட்டை சிம் கார்டு ஆதரவுடன், 4G VoLTE, Wi-Fi 802.11ac (dual-band, 2.4GHz மற்றும் 5GHz) உடன் 2×2 MIMO, ப்ளூடுத் v5.0 உடன் aptX மற்றும் aptX ஹெச்டி ஆதரவு, NFC, GPS/ A-GPS, யூஎஸ்பி Type-C (v2.0), மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் 6 மொபைல் விலை விபரம்

ஒன்பிளஸ் 6 6ஜிபி + 64ஜிபி – ரூ. 34,999

ஒன்பிளஸ் 6 8ஜிபி + 128ஜிபி – ரூ. 39,999

ஒன்பிளஸ் 6 மார்வெல் அவன்ஜர்ஸ் – ரூ.44,999 (8ஜிபி +256ஜிபி)

வருகின்ற மே 21 முதல் அமேசான் வாயிலாக பிரைம் உறுப்பினர்களுக்கும் மே 22 முதல் அனைவருக்கும் கிடைக்கும். மார்வெல் அவன்ஜர்ஸ் எடிசன் மே 29ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.