அசத்தலான ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் விலை கசிந்தது

சீனாவின் ஒன்ன் ப்ளஸ் மொபைல் போன் தயாரிப்பாளரின் , அடுத்த ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலான ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் விலை ரூ.36,999 என தொடங்கலாம் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன்

அசத்தலான ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் விலை கசிந்தது

இந்தியாவில் மே 17ந் தேதி வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் 6 மொபைல் போன் ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5டி ஆகிய மாடல்களின் வெற்றியை தொடர்ந்து ஐபோன் X மொபைல் போனின் தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்டு அசத்தலான அம்சங்களை வழங்க உள்ள இந்த சீனா ஸ்மார்ட்போன் நிறுவனம் தொடர்ந்து அதிரடியான விலையில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் 6.2 அங்குல திரையை பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு ஆண்டராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி 6ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் பெற்று 64ஜிபி உள்ளீட்டு மெம்மரியுடன் அதிகபட்சமாக 256ஜிபி வரை இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புகைப்படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை பதிவு செய்ய செயற்க்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே மிக சிறப்பான புகைப்படங்கள் பெறலாம்.

சமீபத்தில் கசிந்த விலை விபரங்களின் அடிப்படையில் ஒன் ப்ளஸ் 6 மொபைல் போன் விலை 6ஜிபி/64ஜிபி கொண்ட மாடல் ரூ.36,999 மற்றும் 128ஜிபி பெற்ற மாடல் ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்படலாம். வருகின்ற மே 16ந் தேதி ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.