சர்வதேச அளவில் இன்று அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 6T

மிகவும் அரிய நிகழ்வாக, இரண்டு பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 6T மொபைல்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. நாளை ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 6T மொபைல்களை வரும் 30ம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து, பின்னர் ஆப்பிள் நிறுவனமும் அதே தேதியில் தனது தயாரிப்பை அறிமுகம் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, தனது ஒன்பிளஸ் 6T மொபைல்களுக்கான அறிமுகம் தேதியை 29ம் தேதிக்கு அதாவது இன்றைக்கு மாற்றி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் இன்று அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 6T

முதல்முறையாக அமெரிக்காவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ்

சீனாவை சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 6T மொபைல்களை, முதல் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஆப்பிள் நிறுவனமும் தனது புதிய தயாரிப்புகளை நாளை அமெரிக்காவில் அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் தயாரிப்புகளுக்கு போட்டியாக விளங்கும் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் 6T மொபைல்கள் ஆப்பிள் மொபைல்களுக்கு போட்டியாக இருந்து வருவதாகவே தெரிகிறது. அமெரிக்காவில் ஒன்பிளஸ் மொபைல்கள் அறிமுகத்திற்கு பின்னர், ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், ஒன்பிளஸ் தயாரிப்புகள், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாகவே கருத்தப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல, ஒன்பிளஸ் மொபைல்களை அமெரிக்காவில் பிரபலமடைந்து கொண்டே வருகின்றன.

சர்வதேச அளவில் இன்று அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 6T

சாம்சங் நிறுவனமும் போட்டியை சந்திக்கும்

ஆப்பிள் நிறுவனத்திற்கு இதுவரை ஒரே போட்டியாளராக இருந்து வந்த சாம்சங் நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் வரவால் புதிய போட்டியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.