இந்த மாதத்தில் வெளியாக உள்ள ஸ்மார்ட் போன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்த அக்டோபர் மாதத்தில் ஒன்பிளஸ் 6T, ஐபோன் XR, பிக்சல் 3, நோக்கியா 7.1 பிளஸ் போன்ற ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாக உள்ளது. ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட் போன்கள் வரும் 17ம் தேதியும், நோக்கிய 7.1 பிளஸ் ஸ்மார்ட் போன்கள் வரும் 11ம் தேதியும் விற்பனைக்கு வர உள்ளது. கூகிள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் XL ஆகிய ஸ்மாட் போன்களும் இந்த மாத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த மாதம் வெளி வர உள்ள ஸ்மார்ட் போன்களில் உள்ள சிறப்பம்சங்களை கீழே காணலம்.

கூகிள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட் போன்கள்

கூகிள் பிக்சல் போன்களின் வரவை வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் இந்தண்டுகான அதிகாரப்பூர்வ ஆண்டிராய்டு- ஆக வெளியாக உள்ளது. இரண்டாவதாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் கேமரா சிறந்த செயல் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த மாதத்தில் வெளியாக உள்ள ஸ்மார்ட் போன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வரும் என்று தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ரஷ்யாவை சேர்ந்த பிளாக்கர் ஒருவர், கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் புகைப்ப்டங்கை லீக் செய்திருந்த நிலையில், இந்த டிசைன் ஆண்டிராட்டு 9 பை சாப்ட்வேருடன் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார். இரண்டு டோன் டிசைன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் பிக்சல் அடர்த்தி 1440×2960 மற்றும் 493ppi கொண்டதாக இருக்கும் என்றும், போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த பிளாக்கர் வெளியிட்ட வீடியோவில் காட்டப்ப்பட்ட போன் ரிலிஸ் செய்வதற்கு முந்தைய வெர்சன் போன் என்றும், விரைவில் வெளியாக உள்ள கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மறுசீரமைப்பு செய்ததாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போனின் ஸ்பெசிபிகேஷன், ஸ்நாப்டிராகன் 845 சிப்செட், 4சிபி ரேம் அல்லது 64சிபி ஸ்டோரேஜ் மற்றும் 3430 mAH பேட்டரியை கொண்டுள்ளது. கேமிராவை பொருத்தவரை 12 MP சென்சார் மற்றும் பிராண்ட் செல்பி காமிரா 8 MP -ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன் பிளஸ் 6 T

இந்த மாதத்தில் ஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரலாம் என்றும் இதன் விலை 35,000 ரூபாய் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் எதிர்பார்க்கப்படும் அடிப்படை சிறப்பம்சங்களாக Qualcomm Snapdragon 845 Processor, டூயல் சிம் கார்டுகள், OxygenOS,Android 9.0 Pie, 6.28 இன்ச் டிஸ்ப்ளே அளவு கொண்டதாக இருக்கும்.

மேலும் இந்த போன்கள் 6 மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும், 256 ஜிபி இன்பீல்ட் மெமரி கொண்டதாக இருக்கும். கேமராவை பொருத்தவரை இதில், டூயல் கேமரா, முன்புற கேமரா 16 மெகா பிக்சல், பின்புற கேமரா 20 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும், மேலும் இதில் 3,500 mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.

ஜியோமி ரெட்மி நோட் 6

இந்த போனில், டூயல் செல்பி கேமரா, 19:9 நாட்ச் டிஸ்பிளே, அப்கிரேட் செய்யப்பட்ட பின்பக்க கேமரா சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவருகிறது. எனினும், ரெட்மி நோட் 6 ப்ரோவில் முந்தைய மாடலான நோட் 5 ப்ரோவில் பயன்படுத்தப்பட்ட அதே ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் தான் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரெட்மி நோட் 6 ப்ரோ குறித்து ஜியோமி நிறுவனம், சீன உட்பட எந்த முன்னனி சந்தையிலும் இதுவரை தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் தனது எம்ஐ ஃபோரத்தில் மட்டும் நோட் 6 ப்ரோ குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த மாதத்தில் வெளியாக உள்ள ஸ்மார்ட் போன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விலை?
ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ, 4ஜிபி ரேம்/ 64ஜிபி மெமரி வகை போனின் இந்திய விலையானது ரூ.15,700 (தாய்லாந்த் விலையின்படி) இருக்கும் என தெரிகிறது. மற்ற மாடல்களின் விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ போனை, பிளாக், புளு, ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் தாய்லாந்த் இ-காமர்ஸ் வெப்சைட்களில் வரும் செப்.27ஆம் தேதி முதல் செப்.30ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்
புதிதாக வெளிவர இருக்கும் ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில், 6.26 இன்ச் எச்டி + ஐபிஎஸ் எல்சிடியுடன் கூடிய 19:9 நாட்ச் டிஸ்பிளே ஸ்கிரின் பேனல், கார்னரிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. மேலும், 14 என்எம் ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் அட்ரினோ ஜிபியூடன் 4ஜிபி ரேம் 64ஜிபி மெமரியுடன் வருகிறது.

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ கேமராவை பெருத்தவரையில், பின்பக்கம் டூயல் கேமராவில் 12-மெகா பிக்செல் ப்ரைமரி சென்சார் கேமரா, 5 மெகா பிக்செல் சென்சாருடன் ஆட்டோ ஃபோகஸ் 1.4 மைக்ரான் பிக்செலஸ் கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கம் டூயல் கேமராவில் 20-மெகா பிக்செல் ப்ரைமரி சென்சார் கேமரா, ஏஐ பேஸ்லாக்குடன் 2-மெகா பிக்செல் சகண்ட்ரி கேமராவும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரையில் முந்தைய மாடலில் இருந்தது போல் 4,000mah திறன்கொண்ட பேட்டரியே இதிலும் உள்ளது. இதை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை நீடிக்கும் திறன்கொண்டுள்ளது.

நோக்கியா 7.1 பிளஸ்

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு19:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2280 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இந்த மாதத்தில் வெளியாக உள்ள ஸ்மார்ட் போன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி வெளிவரும்.

வைபை,ப்ளூடூத், ஜி.பி.எஸ்,யூ.எஸ்.பி வகை-சி போர்ட், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கயா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இக்கருவி வெளவரும். மேலும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் டிஸ்பிளே வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

கேலக்ஸி நோட் 9 புரோ

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் (128 ஜிபி மட்டும்) போன்ற நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி நோட் 9 (6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடலின் விலை ரூ.67,900 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களிலும் கேலக்ஸி நோட் 9 முன்பதிவுகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்தில் வெளியாக உள்ள ஸ்மார்ட் போன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
– ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
– 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
– BLE எஸ் பென்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஹானர் 8 எக்ஸ்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புக் கொண்டுள்ளது, அன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸமார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதத்தில் வெளியாக உள்ள ஸ்மார்ட் போன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனில் 20எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.2ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் கிரிண் 710 செயலியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.