OnePlus 6T McLaren Edition

இந்தியாவில் ரூ.50,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்ற ஒன்பிளஸ் 6T மெக்லாரன் எடிசன் (OnePlus 6T McLaren Edition) மாடல் ஸ்டாக் உள்ளவரை மட்டும் அமேசான் இந்தியாவில் கிடைக்கும். சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான மெக்லாரன் நிறுவனத்துடன் இணைந்து சீன நிறுவனம் தயாரித்த மாடலாகும்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 2018 வரிசையின் அடிப்படையில் வெளியான மெக்லாரன் எடிசனில், 6 ஜிபி, 8 ஜிபி , 10 ஜிபி என மொத்தமாக மூன்று விதமான ரேம் மாறுபாட்டில் கிடைக்கின்றது.

ஒன்பிளஸ் 6T மெக்லாரன் எடிசன்

6.41 அங்குல முழு ஹெச்டி பிளஸ் காட்சி திரை பெற்ற 2340 x 1080 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்று குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த போனில் 6 ஜிபி, 8 ஜிபி , 10 ஜிபி என மூன்று ரேம் மாறுபாட்டில் 128 ஜிபி , 256 ஜிபி என இரு உள் சேமிப்பு வசதியை பெற்றதாக விற்பனைக்கு உள்ளது.

கேமரா பிரிவில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 16 மெகாபிக்சல் சென்சாருடன் , பின்புறத்தில் 16 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் என இரு கேமரா சென்சாரை கொண்டுள்ளது.

50 சதவீத சார்ஜினை 20 நிமிடங்களில் ஏறும் நுட்பமான ரேப் டெக் ஆதரவை பெற்ற 3,700mAh பேட்டரி கொண்டு ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் கொண்டு செயல்படும் இந்த போனில் மெக்லாரன் கார் நிறுவன லோகோ இடம்பெற்றுள்ளது.