ரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு
சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் 10 ஜிபி கொண்ட 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 50 ஆயிரத்து 999 ரூபாயாகும்.

6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போன்கள் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன் WARP Charge 30 என்ற புதிய சார்ஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகிறது.

ரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு

ஒன் பிளஸ் நிறுவனத்தின் 5ம் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு, பயனாளர்கள் புதிய அனுபவத்தை பெறலாம் என்று அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் 15ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்-லைன் சேனல்களில் விற்பனை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3700mAh பேட்டரி கொண்டுள்ள ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு, “Warp Charge 30” என்று அழைக்கப்படும் புதிய சார்ஜிங் டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. இதன் மூலம் பயனாளர்கள் 20 நிமிட சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் பேட்டரியை பயன்படுத்த முடியும்.

ரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு

10 ஜிபி ரேம் உடன் வெளியாகியுள்ள இந்த ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு, கிராபிக்ஸ்களுடன் கூடிய கேம்ஸ்கள், போட்டோ எடிட்டிங் மற்றும் தேவையான ஆப்ஸ்களுடன் வெளியாகியுள்ளது.