5ஜி அம்சத்தை பெற்ற ஒன்பிளஸ் 7 மொபைல் மற்றும் ஒன்பிளஸ் டிவி என இரு முக்கிய அறிமுகங்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

பிரிமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம், பார்சிலோனாவில் நடைபெற உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்கில் புதிதாக இந்நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்‌ஷீப் கில்லர் மொபைல் மாடலான ஒன்பிளஸ் 7 தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிடலாம். இதுதவிர இந்நிறுவனம் முன்பாக தெரிவித்திருந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட உள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்றை காட்சிக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த தலைமுறைக்கான சேவையாக கருத்தப்படுகின்ற 5ஜி ஆதரவினை பெற உள்ள முதல் ஒன்பிளஸ் நிறுவன மாடலாக ஒன்பிளஸ் 7 விளங்கலாம். இதனை தவிர ஸ்மார்ட்போன் சந்தை தொடர்பான ஸ்லைடர் அல்லது மடிக்ககூடிய மொபைல் கான்செப்ட்களை காட்சிப்படுத்துவதுடன், கூடுதலாக இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் தொலைக்காட்சி சிறந்த வசதிகளுடன், உயர் தரமான முறையில் காட்சிகள் பெறுவதுடன் ஆடியோ திறன் அபரிதமாக வழங்கப்பட உள்ளது. MWC 2019-ல் இந்நிறுவனம் மாடல்களை நேரடியாக அறிமுகம் செய்யாமல் ஒன்பிளஸ் 7 மொபைல் மற்றும் ஒன்பிளஸ் டிவி தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் விபரங்களுடன் பயனாளர்களின் கருத்துகளை கொண்டு சில முக்கிய முடிவினை எடுக்க உள்ளது.