ஒன்பிளஸ் 7 மொபைல் போனின் படங்கள் வெளியானது

5 ஜி சேவை தொடர்பான முதல் ஒன்பிளஸ் மொபைல் போன் மாடலை ஒன்பிளஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸின் 7 தொடர்பான மொபைல் போன் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Oneplus 7 சிறப்புகள் அறிவோம்

வரும் மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2019 அரங்கில் முதன்முறையாக 5ஜி டெலிகாம் சேவை ஆதரவை பெறுகின்ற மொபைல் போன் மாடலைபல்வேறு நிறுவனங்கள் வெளியிட உள்ள நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிறுவனம், முழுமையான காட்சி திரை கொண்ட அதாவது எவ்விதமான நாட்ச் இல்லாத ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 7 மாடலை வெளியிடலாம் என கருதப்படுகின்ற நிலையில் அதோபோன்ற படத்தை இணையத்தில் ஒரு வலைதளம் வெளியிட்டுள்ளது. மேலதிக விபரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

ஒன்பிளஸ் 7 மொபைல் போனின் படங்கள் வெளியானது

பார்சிலோனோ நகரில் பிப்., 24ந் தேதி தொடங்கப்பட உள்ள 2019 மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் அரங்கில், இந்நிறுவனம் டிவி மற்றும் ஒன்பிளஸ் 7 தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிடக்கூடும். மேலும் சியோமி, விவோ, ஒப்போ போன்ற சின நிறுவனங்கள் உட்பட எல்ஜி, சாம்சங் போன்ற கொரியா நிறுவனங்களும் 5ஜி ஆதரவு மொபைல்கள் மற்றும் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன.

படங்கள் உதவி – ஸ்லாஷ் லீக்ஸ் மற்றும் டிவிட்டர்