ஒன்பிளஸ் 7 விலை

ஒன்பிளஸ் (oneplus) ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் புதிய ஒன்பிளஸ் 7 மொபைல் நுட்பவிபரங்கள் மற்றும் விலை ஆன்லைன் ரீடெயிலர் இணையதளம் வாயிலாக கசிந்துள்ளது. ஒன்பிளஸ் 7-ல் 12 ஜிபி ரேம் பெற்று 256 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலே எட்டி பார்க்கும் வகையிலான 16 எம்பி பாப் அப் செல்ஃபி கேமராவுடன் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டதாக ஒன்ப்ளஸ் 7 போன் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் விரைவான ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்தை பெற்றிருக்கும்.

OnePlus 7 போன் விலை மற்றும் வசதிகள்

கிஸ்டாப் இணையதளத்தில் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் 7-ல் உள்ள வசதிகள் குறித்தான விபரங்களில் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பிராசெஸருடன் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் விற்பனைக்கு கிடைக்கலாம்.

இதில் 8 ஜிபி ரேம் பெற்ற மாடலில் 128 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் மாடலில் 256 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக விளங்கும் என குறிப்படிடப்பட்டுள்ளது.

6.5 அங்குல முழுமையான காட்சி திரையை AMOLED டிஸ்பிளேவினை பெற்றதாகவும் கேமரா பிரிவில் பின்புறத்தில் செங்குத்தான மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. 48 மெகா பிக்சல் ,20  மெகா பிக்சல் மற்றும் 16 மெகா பிக்சல் கேமராக்கள் உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான மேல் எழும்பி வரும் வகையிலான பாப் அப் 16 மெகா பிக்சல் சென்சார் வழங்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7 பாப் அப் செல்ஃபி கேமரா

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருக்கின்ற ஒன்பிளஸ் 7 போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் மிக விரைவாக இந்த போனில் உள்ள 4,000mAh பேட்டரியை சார்ஜிங் செய்யலாம்.

ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 39,990 என தொடங்க வாய்ப்புகள் உள்ளது.