OnePlus 7 live images

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்‌ஷீப் கில்லர் மாடலாக வரவுள்ள ஒன்பிளஸ் 7 போனில் பாப் அப் செல்பி கேமராவை பெற்றதாக லீக் ஆன படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் 7-ல் மூன்று கேமராவை பின்புறத்தில் பெற்றிருப்பதுடன், ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பிராசெஸரை கொண்டதாக அமைந்திருக்கலாம்.

இந்த போன் மாடலில் ஒன்ப்ளஸ் 5ஜி ஆதரவை பெற்றிருக்காது , மேலும் இதில் 3.5மிமீ ஆடியோ ஜாக் வசதியும் இடம்பெற்றிருக்காது என குறிப்படப்படுகின்றது.

oneplus logo

ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனின் படங்கள்

சமீபத்தில் வெளியான விவோ வி15 ப்ரோ மற்றும் வரவுள்ள ஒப்போ எஃப்11 ப்ரோ மாடல்களை போல அமைந்துள்ள மேல் எழும்பி செல்பி கேமராவை பெற்றதாக அமைந்துள்ளது. ஒன்பிளஸ் போன் நிறுவனம் மிகவும் நேர்த்தியான 6.5 அங்குல ஹெச்டி வடிவமைப்பினை கொண்டதாகவும் நாட்ச் லெஸ் ஸ்கீரினை பெற்றதாக அமைந்திருக்கும். இந்த போன் 162.6x76x8.8mm அளவுகளை பெற்றிருக்கும்.

OnePlus 7 Leaked

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பிராசெஸருடன் அமைய உள்ள இந்த போனில், 6 ஜிபி ரேம் முதல் 12 ஜிபி ரேம் வரை இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது. இந்த போன் மாடலில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக  செங்குத்தான நிலையில் மூன்று கேமராவினை பெற்றிருக்கும். இதுதவிர செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பாப் அப் முறையில் கேமரா வழங்கப்பட்டிருக்கும்.

ஒன்ப்ளஸ் நிறுவனம், 5ஜி மொபைலை இந்த வருடம் வெளியிட உள்ள நிலையில் ஒன்பிளஸ் 7-ல் 5ஜி வசதி இடம்பெறாது. மேலும் இந்த போனில் வயர்லெஸ் சார்ஜிங் , 3.5மிமீ ஆடியோ ஜாக் இடம்பெற வாயப்பில்லை.

OnePlus 7 Leaked Renders