OnePlus 7, OnePlus 7 Pro 5G details in Tamil

வரும் மே 14 ஆம் தேதி பெங்களூருவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் 7 , ஒன்பிளஸ் 7 ப்ரோ ரக ஸ்மார்ட்போன்கள் பல்வேறு சிறப்புகளுடன் வரவுள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் 7 சீரிஸ் ப்ரீ-புக்கிங் அமேசான் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகின்றது.

ஒன்பிளஸ் 7 வரிசை மொபைல்களை ப்ரீ புக்கிங் செய்பவர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள அமேசான் இ-கிஃப்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதனை பெற மே 3 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி இரவு 11.59 வரை முன்பதிவு மேற்கொள்பவர்களுக்கு ஜூன் 11க்கு முன்பாக ஒன்பிளஸ் 7 மொபைல்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும்போது மின்னஞ்சல் மூலம் இதனை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ப்ரீபுக்கிங் சலுகையாக ஸ்கீரின் பாதிப்படைந்தால் முதல் 6 மாதங்களுக்கு இலவச ஸ்கீரின் பாதுகாப்பு பிளான் வழங்கப்படுகின்றது. இதுதவிர ஒன்பிளஸ் கேர் ஆப் சலுகையும் வழங்கப்பட உள்ளது.

ஒன்பிளஸ் 7 நுட்பவிபரங்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 7 வரிசையில் இடம்பெற உள்ள ப்ரோ ரக மாடல்

6.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் 1440×3120 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டிருக்கும். ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் இயக்கப்படுகின்ற இந்த மாடலில் 10 ஜிபி ரேம் பெற்றிருக்கும்.

ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி

பாப் அப் செல்ஃபி கேமரா கொண்டுள்ள ஒன்பிளஸ் 7 புரோ மாடலில் பிரைமரி ஆப்ஷனில் டிரிப்ள் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டிருகின்றது. 48 எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் அல்ட்ரா வைட் ஏங்கிள் கேமராவை பெற்றிருக்கும். ஆனால் ஒன்பிளஸ் 7 மாடல் டூயல் கேமரா ஆப்ஷனுடன் வழக்கமான செல்ஃபி கேமரா கொண்டிருக்கும். மிக விரைவான சார்ஜிங் வசதியுடன் 4,000mAh பேட்டரியை ஒன்பிளஸின் 7 ப்ரோ பெற்றதாக விளங்கும்.